தமிழ்நாடு

கமல்ஹாசனுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல் – மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார்!

சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவி மீது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 கமல்ஹாசனுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல் – மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார்!
கமல்ஹாசனுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல் – மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார்!
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன், சமீபத்தில் சென்னை நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் சனாதனம் தொடர்பாகத் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். அந்த உரையில் அவர் கூறிய கருத்துகள் சிலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தின.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், துணை நடிகர் ரவி ஒரு பேட்டியில் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

சின்னத்திரை துணை நடிகர் ரவி யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், கமல்ஹாசனுக்கு நேரடியாகக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த மிரட்டல்தமிழக மக்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்த மக்கள் நீதி மையம் கட்சி சார்பில், கட்சியின் துணைத்தலைவர் மவுரியா, கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மயில்வாகனன், அர்ஜுனர் உள்ளிட்டோர், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தைச் சென்றடைந்தனர்.

அவர்கள் அளித்த புகாரில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரவி மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காவல் துறை தற்போது புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.