சதத்தை தவற விட்ட ஜடேஜா.. இந்தியா 376 ரன்கள் குவிப்பு.. தடுமாறும் வங்கதேசம்!
சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 86 ரன்னில் தஸ்கின் அகமது பந்தில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு சிறிது நேரத்தில் சத நாயகன் அஸ்வினும் (133 பந்தில் 113 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.