தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தது இணையதளங்களில் பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியினை விவகாரத்து செய்ய முடிவெடுத்த போது எழாத விவாதம் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன், நடிகர் ரவி மோகன் ஒன்றாக பங்கேற்றது பேசுப்பொருளாகியது.
இந்த நிகழ்விற்கு பிறகு ஆர்த்தி ரவி தன் ஆதங்கத்தை தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரவி மோகன் ஒரு அறிக்கையினை வெளியிட அதில் தனது மாமியார் மீதும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பதிலுக்கு ஆர்த்தியின் தாய், சுஜாதா அறிக்கை வெளியிட குடும்ப பிரச்சினை ஒட்டுமொத்தமாக இணையத்தில் விவாத பொருளாகியது.
”தனது சொத்துகளை,கௌரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை. நன்றாக முன் கூட்டியே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள Range Rover காரில் தான் வீட்டை விட்டுச் சென்றார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும், மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார்.” என நடிகர் ரவிமோகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இறுதியாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் ஆர்த்தி.
இந்நிலையில் தான், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஆர்த்திக்கும்,அவரது தாயாருக்கும் தடை விதிக்க வேண்டும் என ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், “பொதுவெளியில் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதைப்போல் ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.”
கொலை மிரட்டல் வருகிறது: கெனிஷா பிரான்சிஸ்
'ரவி மற்றும் ஆர்த்தி இடையிலான திருமண முறிவுக்கு நான் தான் காரணம் என சில பயனர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் மற்றும் அவதூறான செய்திகளைப் பெறுவதாக’ கெனிஷா பிரான்சிஸ் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது பதிவில், "உங்களில் பெரும்பாலோருக்கு என் உண்மையும் வலியும் தெரியாததால், மோசமான வார்த்தைகளை என் மீது சுமத்துவது எளிது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் விரைவில் ஒரு நாள் உண்மை வெளிப்படும் என்று கடவுள்களிடம் நான் பிரார்த்திக்கிறேன். நான் தவறு செய்தால், சட்டத்தால் தண்டிக்கப்பட நான் தயாராக இருக்கிறேன். அதுவரை, வெறுப்பு இல்லாமல் என்னை சுவாசிக்க அனுமதிக்க முடியுமா?" என குறிப்பிட்டுள்ளார்.