IPL 2025: தொடர் வெற்றியில் டெல்லி கேப்பிடல்ஸ்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் RCB-ஐ வீழ்த்தியது!
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி தொடர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.