ஐ.பி.எல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றிபெற்றது.
டெல்லி அணிக்காக தற்போது விளையாடி வரும் கே.எல். ராகுல் கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தி வந்தார். கடந்த சீசனில் லக்னோ தொடர் தோல்வியை சந்தித்து வந்ததால், அந்த அணியின் உரிமையாளர் கே.எல். ராகுலை மைதானத்திலேயே வைத்து கோபமாக பேசியது இணையத்தில் வைரலானது. அணியின் உரிமையாளர் என்பதற்காக ஒரு வீரரிடம் மைதானத்தில் கடுமையாக கோயங்கா நடந்து கொண்டது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, வீரர்களிடமும் அதிர்சியை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் டெல்லி அணி ராகுலை ஏலத்தில் எடுத்தது. அந்த அணியின் கேப்டனாக கே.எல் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் பொறுப்பு வேண்டாம் என்று கூறிய ராகுல் வீரராக ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக விளையாடி வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் என்ன செய்யப்போகிறார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். நடப்பு தொடரில் இதுவரை 3 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் வெற்றிக்கு பிறகு வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து வந்தனர். அப்போது, லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல் ராகுலிடம் சிரித்த முகத்துடன் கைக்கொடுத்து ஏதோ சொல்ல வந்தார். ஆனால், மரியாதைக்காக கைக்கொடுத்த ராகுல் சட்டென்று அலட்சிமாக கடந்து சென்றார். ஆனால், அந்த இடத்தில் லக்னோ உரிமையாளர் சிரித்தபடி நின்ற வீடியோ தற்போது, இணையத்தில் வைரலான நிலையில், ராகுல் கோயங்காவிற்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டாதாக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.