தமிழக அரசியலில் புது எண்ட்ரீ கொடுத்த விஜய், தவெகவின் முதல் மாநாட்டின் போது, ‘சினிமா கரியரின் உச்சபட்ச வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன்’ என பேசியிருந்தார். இவரது இந்த பேச்சால், ’ச்சே..நமது தலைவன் தியாகி டா’ என அவரது ரசிகர்கள் பலரும் சில்லறையை சிதறவிட்டனர். ஆனால் தற்போது, அது வேற வாய், இது வேற வாய் என்பது போல, ’கட்சிக்காக, தேர்தலுக்காக நான் ஏன் எனது சொத்த விற்கவேண்டும்’ என தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் பேசிவருவதாக முணுமுணுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.
ஆளும் தி.மு.கவிலும் சரி, ஆண்ட அ.தி.மு.கவிலும் சரி நிதிக்கு குறைவில்லை. ஆனால் த.வெ.க அப்படி இல்லை. கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆகின்றன. எந்த தேர்தலையும் எதிர்கொள்ளவில்லை. கட்சி நிகழ்ச்சிகளின் செலவுகூட நிர்வாகிகளின் தலையிலேயே விழுகிறது. ஆக, கட்சி நடத்துவதற்கே நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆ மாதங்களே உள்ளன.
இந்த நிலையில் பூத் கமிட்டி, வேட்பாளரின் தேர்தல் செலவு தொடர்பாக தவெக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முக்கிய நபர், 'தலைவர் போட்டியிடும் தொகுதிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன்' என்று சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால், பிறருக்கு செலவு செய்ய அவர் தயாரில்லை என்பதாக நிர்வாகிகள் புரிந்துகொண்டுள்ளனர். இன்னொரு பக்கம் கட்சியின் நிதி விவகாரங்களை கவனிக்கும் நபர், விஜய்க்கு சொந்தமான மூன்று சொத்துகளை அடையாளம் காட்டி, 'அவற்றை விற்றால் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஏதுவாக இருக்கும்' என்று கூறியிருப்பதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அதற்கு விஜய் தரப்போ, 'நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த சொத்தை எதற்கு விற்கவேண்டும்? சினிமாவின் உச்சபட்ச வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ள என்னிடம், இருக்கும் சொத்தையும் விற்குமாறு கூறுவது வேடிக்கையாக இருக்கிறது' என கடிந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 'விஜயகாந்த், வைகோ ஆகியோர் கட்சி ஆரம்பித்த போது நாயுடு லாபி உதவி செய்தது. எடப்பாடி, அண்ணாமலைக்கு கவுண்டர் லாபி உதவி செய்தது. அதுபோல நான் கட்சி தொடங்கினால் குறிப்பிட்ட சமூகத்தின் லாபி உதவி செய்யும் எனச் சொன்னீர்கள். எதுவும் நடக்கவில்லை. தவிர, காசு கொடுத்துதான் ஓட்டு வாங்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை. ஊழலை ஒழிக்க வந்திருக்கும் நாமே காசு கொடுத்தால், தவறான முன்னுதாரணமாகிப் போகும். பொது சேவையில் நாட்டமுள்ள நம் கட்சியினரை மக்கள் மனதார வரவேற்கிறார்கள். மக்கள் செல்வாக்குள்ள, வசதியுள்ள நபர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்யுங்கள். வெற்றி நிச்சயம்' என்று கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் அரசியலுக்கு வந்தால் மட்டும் போதுமா செலவு செய்ய மட்டும் கஷ்டமாக இருக்கிறதா எனவும், நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்சம் வரை பணம் கேட்கிறார்கள் என்று பார்த்தால் அனைத்திற்கும் நம்மிடமே பணம் கேட்பார்கள் போலவே எனவும் தவெக தொண்டர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே கொடி சர்ச்சை, கூட்டணி பலம் இல்லை என பல நெருக்கடி தவெக சந்தித்து வரும் வேளையில், கட்சிக்காக விஜய் செலவு செய்ய யோசிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...