நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றையப்போட்டி தரம்சாலாவில் உள்ள HPCA ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின . இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதிரடி காட்டிய பிரப்சிம்ரன்சிங்
இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா பிரப்சிம்ரன்சிங் ஆட்டத்தை தொடங்கினர். இதில் ஆர்யா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில், பிரப்சிம்ரன் சிங் அபாரமாக விளையாடினார். அவர் அதிகபட்சமாக 6 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 48 பந்துகளில் , 91 ரன்களை குவித்தார். ஜோஷ் இங்கிலிஸ் 30 ரன்னிலும், ஸ்ரேயஸ் ஐயர் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வதேரா 16 ரன்னிலும் அவுட் ஆனார். ஷஷாங்சிங் 33 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 15 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது.
237 ரன்கள் இலக்கு:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்கரம் மற்றும் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், எய்டன் மார்க்ரம் 13 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் ரன் எதுவ்ம் எடுக்காமல் டக் அவுட் ஆகினர்.
அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், ஆயுஷ் பதோனி களமிறங்கினார். கேப்டன் ரிஷப் பண்ட் 18 ரன்னில் ஆட்டமிழக்க,மறுமுனையில், பதோனி அதிரடி காட்டினார். பதோனி 40 பந்துகளில், 74 ரன்களை குவிக்க, சாஹல் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டேவிட் மில்லர் அடுத்து 11 ரன்னில் ஆட்டமிழந்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். அப்துல் சமத் 45 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆவேஷ்கான் 19 ரன்களும், பிரின்ஸ் யாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை மட்டுமே லக்னோ அணி சேர்த்தது. இதன்மூலம், பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், அதிபட்சமாக 91 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன்சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.