லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைய இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் லக்னோ அணி உள்ளது. ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறியுள்ள சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் குறைந்தப்பட்சம் நல்ல இடத்தை பிடிக்க போராடி வருகிறது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ஷ் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் குவித்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரிஷப் பந்த் (7) ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். இன்றைய ஆட்டத்தில் எளிதாக விக்கெட்டினை ரிஷப் பறிக்கொடுத்த நிலையில், போட்டியினை பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கே அப்செட் மோடில் பால்கனியிலிருந்து அறைக்குள் நுழைந்தார். இதுத்தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்பின் களமிறங்கிய ஆயுஷ் பதோனி (3) ரன்களில் ஆட்டமிழந்தாலும், நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 45 ரன்கள் சேர்த்தார். அப்துல் சமாத் 6 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாக்கூர் ஒரு பந்தில் ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்தார். ரவி பிஷ்னோய் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 0 மற்றும் 6 ரன்கள் எடுத்தனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணியின் எஷான் மாலிங்கா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி,துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என சன்ரைசர்ஸ் களமிறங்கி விளையாடி வருகிறது.