நடைப்பெற்று முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வெற்றி குறித்து முன்னாள் RCB வீரர் கிறிஸ் கெய்ல் மனம் திறந்து பேசியுள்ளார்.
கிறிஸ் கெய்ல், 2011 முதல் 2017 வரை RCB அணிக்காக விளையாடிய காலப்பகுதியில், பல வெற்றிகளைத் தனிப்பட்ட முறையில் கொண்டுவந்தவர். அவரது அதிரடி ஆட்டம், பறக்கவிட்ட சிக்ஸர்கள் இன்னும் ரசிகர்களின் நினைவில் உள்ளது. RCB வெற்றிக்குப் பின்னணியில் இருந்த முன்னாள் வீரர்களின் பங்களிப்பும் இன்றும் ஆர்சிபி ரசிகர்களால் பெருமையாகப் பேசப்படுகிறது.
ஆர்சிபி அணியின் வெற்றிக்குறித்து அவர் கூறியதாவது, "ஐ.பி.எல் கோப்பையை ஆர்.சி.பி அணியும், என்னுடைய நெருங்கிய நண்பருமான விராட் கோலி வென்றதில் மிக்க மகிழ்ச்சி என்றும், நான் முன்பு கூறியதைப் போலவே காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும். Ee Sala Cup Namde என்று கூறிவந்த நிலையைல், 18 ஆண்டுகளாகக் கோப்பையை வெல்வதற்காகக் காத்திருந்தோம். ஒரு வழியாக ஐபிஎல் கோப்பையை வென்றது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.
ஆர்சிபி அணியில் இல்லாவிட்டாலும் ஐ.பி.எல் கோப்பையைத் தூக்கிப் பிடிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஆர்.சி.பி கோப்பையை வெல்வதை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அணியில் இல்லாவிட்டாலும் ஐ.பி.எல் கோப்பையைத் தொடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வழியாகக் கோப்பையை வென்றுவிட்டோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது" என்று உருக்கமுடன் கூறினார். அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் என கெயில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.