இந்தியா

ரூ.39-க்கு ஐபிஎல் அணி.. அடிச்சது 4 கோடி ரூபாய் ஜாக்பாட்

Dream11-ல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வெறும் ரூ.39 முதலீடு செய்து 4 கோடி ரூபாய் வென்றுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரூ.39-க்கு ஐபிஎல் அணி.. அடிச்சது 4 கோடி ரூபாய் ஜாக்பாட்
mangal saroj of uttar pradesh won rs 4 crore on dream 11 IPL fantasy
Dream 11 ஒரு பேண்டஸி விளையாட்டு தொடர்பான ஆன்லைன் செயலி. கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, கூடைப்பந்து உட்பட பல போட்டிகளை முன்னிறுத்தி இயங்கி வருகிறது. பயனர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்தி பந்தயத்தில் ஈடுபட இயலும். சமீபத்தில் நடைப்பெற்று வரும் ஐபிஎல் தொடரில் Dream 11 ஒரு முக்கிய பங்குத்தாரர்.

போட்டி தொடங்குவதற்கு முன் ஒரு அணியினை உருவாக்கி அதன் மீது பணம் செலுத்தி பந்தயத்தில் ஈடுபடலாம். இந்த நிலையில் தான் உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்திலுள்ள காசி ராம் கா பூர்வா கிராமத்தை சார்ந்த மங்கல் சரோஜின் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது, Dream 11 செயலியில் ரூ.39-க்கு ஒரு அணியினை உருவாக்கியுள்ளார்.

மறுநாள் காலை பார்த்தால், அவர் உருவாக்கிய அணிக்கு 4 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. மங்கல் சரோஜ் ஒரு ஏழை எளிய குடும்பத்தை சார்ந்தவர். அவரது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 8. சொந்த நிலம் ஏதும் இல்லாத நிலையில், குத்தகைக்கு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய வருமானம் என சொல்லிக்கொள்ளும் படி ஏதும் இல்லாத நிலையில், இந்த பரிசுத்தொகை அவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்துள்ளது.

Dream 11-ல் வென்றது குறித்து மங்கல் சரோஜ் கூறுகையில், பலமுறை நான் Dream 11-ல் பங்கேற்று தோல்வியுற்றுள்ளேன். இருந்தாலும் ஒரு நம்பிக்கை இருந்தது. என் நம்பிக்கை வீண் போகவில்லை. இந்த பணத்தை நல்ல மற்றும் நிலையான தொழிலில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுத்தொடர்பாக இவர் பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


(இச்செய்தி ஒரு தகவலுக்காக மட்டுமே. Dream 11 கூற்றுப்படி, Dream 11 நிதி ஆபத்தை உள்ளடக்கியது. பயனர்கள் இந்த தளத்தில் முதலீடு செய்யும் போது பணத்தை இழக்க நேரிடும், மேலும் இதற்கு அடிமையாகும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த அபாயங்கள் குறித்த விழிப்புணர்வோடு Dream11 ஐ அணுகுவது முக்கியம்)

(* Dream11, like any fantasy sports platform, involves financial risk. Users can lose money they invest in the platform, and the potential for addiction is a concern. It's important to approach Dream11 with a mindful awareness of these risks.)