சினிமா

ஜனநாயகன் படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்...உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்

மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் சென்னை திரும்பினார்.

ஜனநாயகன் படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்...உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்
மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய விஜய்
ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய்

தவெக தலைவரும், நடிகருமான விஜய் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த மூன்று தினத்திற்கு முன்னதாக மதுரைக்கு புறப்பட்டு சென்றார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் மதுரையில் இருந்து தனி வாகனம் மூலம் கொடைக்கானலுக்கு புறப்பட்டு சென்றார்.

மூன்று நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து தனி விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி வாகனம் மூலம் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார். மேலும் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக கொடைக்கானல் பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக விஜய் ரோடு ஷோ சென்றார். அங்குள்ள மக்கள் விஜய்க்கு ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர் விஜய் சென்ற வாகனத்தின் அருகில் நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்துகொண்டனர்.

அனுமதி மறுப்பு

கொடைக்கானல் பகுதியில் ஜனநாயகன் படப்பிடிப்பு விஜய் கலந்துகொண்டது காட்டுத்தீ போல் பரவியதால் அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள், சுற்றுலா பயணிகள் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குவிந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

குறிப்பாக அரசு அதிகாரிகள், அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்களில் பிளாஸ்டிக் வாட்டார் கேன் உள்ளிட்டவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகன் படப்பிடிப்பு பகுதியில் ஏராளமான காலி தண்ணீர் பாட்டில்கள் கீழே கிடந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் வாட்டர் கேன்

குறிப்பாக மற்ற நபர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் அரசு படப்பிடிப்பு பகுதியில் மட்டும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்காமல் இருப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.