18-வது சீசன் ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே-ஆப் செல்ல அனைத்து அணிகளும் தங்களது முழு திறமையினை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
217 ரன்கள் குவித்த மும்பை அணி:
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோகித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பவர் ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் குவித்தனர். எப்போதும் சிக்ஸர்களை பறக்கவிடும் ரோகித் இந்த போட்டியில் பவுண்டரிகளாக பந்துகளை விரட்டினார். ரிக்கல்டன் மறுமுனையில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 116 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில் ரியான் பராக் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்த நிலையில் தீக்ஷானா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் கூட்டணி சேர்ந்த சூர்யாக்குமார் யாதவ்- ஹார்த்திக் பாண்டியா இணை அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் குவிக்க அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்களை குவித்தது. சூர்யக்குமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 48 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
டக் அவுட் ஆகிய வைபவ்:
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. சென்ற போட்டியில் சதம் விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இப்போட்டியில் நிலவியது. ஆனால் ரசிகர்களின் நம்பிக்கை பொய்த்து போகும் வகையில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து டிரண்ட் போல்ட் வீசிய பந்தினை சிக்ஸருக்கு பறக்கவிட, ராஜஸ்தான் ரசிகர்களுக்கு மீண்டும் நம்பிக்கை துளிர்விட்டது. யார் கண் பட்டதோ? அடுத்த கணமே டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய நிதிஷ் ரானா, கேப்டன் ரியான் பராக், ஹெட்மயர், துருவ் என அனைவரும் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினர்.
இம்பெக்ட் ப்ளேயராக நுழைந்த சுபம் துபேவும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆர்ச்சர் மட்டும் ஒருமுனையில் பொறுமையாக ரன்கள் குவிக்க ராஜஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. 16.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியுற்றது. இப்போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது ராஜஸ்தான் அணி. மும்பை அணி 14 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
2012 க்கு பிறகு ஜெய்பூர் மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் இம்மைதானத்தில் நடைப்பெற்ற 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து இருந்தது மும்பை அணி. நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்த போட்டியில் இதுவரை தோற்றதில்லை என்கிற சாதனையை தொடர்கிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை ஒட்டுமொத்தமாக 17 போட்டிகளில் முதலில் பேட் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது மும்பை. இந்த 17 போட்டிகளிலும் மும்பை அணியே வென்றுள்ளது.