ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்: விருச்சிகம் முதல் மீனம் வரை.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு

விருச்சிகம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிபலன் விவரங்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு.

இன்றைய ராசிபலன்: விருச்சிகம் முதல் மீனம் வரை.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு
விருச்சிகம்: உழைப்பதில் சோம்பல் தவிர்த்தால், உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல உங்க திறமைக்கு உரிய பெருமை நிச்சயம் கிட்டும்க. வீட்டுல விசேஷங்கள் வரத் தொடங்கும்க. வீடு, வாகனம் புதுப்பிக்க சந்தர்ப்பம் அமையும். விலகி இருந்த உறவுகள் வீடு தேடி வரும்க. பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும்க. செய்யும் தொழில் படிப்படியா வளர்ச்சி பெறும்க. புதிய ஒப்பந்தங்களை கவனமா செய்யுங்க. அரசு, அரசியல் துறையினருக்கு உயர்வுகள் உருவாகும்க. வார்த்தைகள்ல பணிவு இருந்தா வாழ்க்கைல மேன்மை வரும்க. பயணத்துல வேகம் வேண்டாம்க.ஒற்றைத் தலைவலி, எலும்பு, மன அழுத்த உபாதை வரலாம்க. அரங்கனைக் கும்பிடுங்க. ஆனந்தம் பெருகும்.

துலாம்: சுறுசுறுப்பாகச் செயல்பட்டா, சுபிட்சங்கள் அதிகரிக்கும் கால கட்டம்க. பணியிடத்துல பொறுப்பு உணர்வு அவசியம்க. சிலருக்கு இடமாற்றம், பதவி மாற்றம் வரலாம்க. அது எதிர்கால ஏற்றத்துக்கு உதவும், தவிர்க்க வேண்டாம்க. குடும்பத்துல ஒற்றுமை |அதிகரிக்கும்க. வீடு, வாகனம் புதுப்பிக்க நேரம் அமையும்க. குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துக்க வேண்டாம்க. தினமும் சிறிது நேரமாவது தியானம்,யோகா செய்வது நல்லதுங்க. அரசு, அரசியல் |சார்ந்தவங்களுக்கு பாராட்டு, பெருமைகள் கிட்டும்க. தொலைதூரப் பயணத்தை பகல்ல தொடங்குங்க. ஒற்றைத் தலைவலி, அலர்ஜி, பூச்சி தொல்லைகள் வரலாம்க. உணவை முறைப்படுத்துங்க. மாருதியைக் கும்பிடுங்க. வாழ்க்கை மணக்கும்.

தனுசு: எல்லாம் தெரியும் நினைவு தவிர்த்தா, நடப்பவை நல்லவையாகும் காலகட்டம்க. அலுவலகத்துல தேவையற்ற பதற்றமும் வேண்டாத வாதமும் கூடாதுங்க. கோப்புகள்ல கவனத்துடன் கையெழுத் திடுங்க. குடும்பத்துல உறவுகளுடன் விட்டுக் கொடுத்தல் முக்கியம்க. பிறர் பிரச்னைக்கு பஞ்சாயத்து பேச மூக்கை நுழைக்க வேண்டாம்க. புதிய நபர்களிடம் நெருக்கம் தவிருங்க. செய்யும் தொழில்ல புதிய முயற்சிகளை ஒத்திவையுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையா இருங்க. அடிவயிறு, முதுகு, பாதம் உபாதைகள் வரலாம்க. வேலவனைக் கும்பிடுங்க. விசேஷங்கள் நடக்கும்.

மகரம்: சாதகங்கள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடிவரும்க. பொறுப்பு உணர்வுடன் செயல்படுவது நல்லதுங்க. வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும்க. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்க. வாரிசுகளால் பெருமை சேரும்க. குலதெய்வத்தை தினமும் சிறிது நேரமாவது கும்பிடுங்க. ஆடை, ஆபரணம் சேரும்க. செய்யும் தொழில்ல லாபம் சீராகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அமைதியாக இருப்பதுதான் நல்லதுங்க. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும்க. சட்ட நடைமுறைகளை முழுமையா மதிச்சு நடங்க. நரம்பு, மூட்டு, பற்கள் உபாதை வரலாம்க. வேழமுகனைக் கும்பிடுங்க. வேண்டியவை நடக்கும்.

கும்பம்: அமைதியாகச் செயல்பட்டா ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமை நிச்சயம் உணரப்படும்க. பதவி, இடமாற்றம் தாமதமாவதை நினைச்சு, வீண் புலம்பல் வேண்டாம்க. வீட்டுல விட்டுக் கொடுத்தல் முக்கியம்க. சுபகாரியச் செலவுகள் அதிகரிக்கலாம்க. வரவை சீராக செலவிடவும், திட்டமிட்டு சேமிக்கவும் பழகுங்க. செய்யும் தொழில்ல நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க யாருக்கும் ஜாமீன், |வாக்குறுதி தரவேண்டாம்க. கலைஞர்கள் முயற்சிக்குப் பலன் பெறலாம்க. மூட்டுகள், நரம்பு, அலர்ஜி, சுளுக்கு பிரச்னைகள் வரலாம்க. நரசிம்மரைக் கும்பிடுங்க. நல்லவை நடக்கும்.

மீனம்: பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டா, பெருமைகள் நிலைக்கும் காலகட்டம்க. அலுவலகத்துல அலட்சியமும் அவசரமும் கூடாதுங்க. பொறுப்புகளை நேரடியா கவனியுங்க. இல்லத்துல இனிய சூழல் நிலவும்க. விலகி இருந்த உறவும் நட்பும் உங்க பெருமை பேசத்தொடங்கும்க. பணவரவை சேமிக்கறது நல்லதுங்க. தரல், பெறல் எதையும் உடனுக்குடன் குறிச்சு வையுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க பொது இடங்கள்ல வாக்குறுதி தரும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்கறது நல்லதுங்க. செய்யும் தொழில்ல உழைப்புக்கு ஏற்ப லாபம் அதிகரிக்கும்க. வர்த்தகச் சட்டங்களை முழுமையா கடைப்பிடிங்க. கலைத்துறையினர் கர்வம் தவிர்த்து செயல்படறது நல்லதுங்க. அஜீரணம், ரத்த நாள உபாதை, கழிவு உறுப்புப் பிரச்னைகள் வரலாம்க. சுதர்சனரைக் கும்பிடுங்க. சுபிட்சங்கள் தொடரும்.