ஐபிஎல் 2025

ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டம் - 10 பேரிடம் விசாரணை

சென்னையில் ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கையும் களவுமாக 19 லட்சம் பணத்துடன் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டம் - 10 பேரிடம் விசாரணை
சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில், ஆன்லைன் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை பிடித்து யானைகவுனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பிறகு ரூ.19 லட்சத்தை பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lotus - எனும் இணையதளத்தில், சென்னை சவுக்கார்பேட்டை பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைது செய்தவர்களை யானைக் கவுனி காவல் நிலையத்தில் வைத்து விசாரத்ததில், அவர்களிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார், பறிமுதல் செய்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நடப்பு ஐபிஎல் போட்டிகளில், பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் நேரத்தில் மட்டும், லோட்டஸ் ஹெர்பல்ஸ் இணையதளத்தில் பொருட்கள் வாங்கினால் தயாரிப்புகளுக்கு 100% பணத்தை மீட்கும் சலுகையானது அதாவது Cashback Offer வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Cashback பயனரின் லோட்டஸ் ஹெர்பல்ஸ் வாலட்டில் சேர்க்கப்படும் என சூதாட்டம் நடந்துள்ளது. ஒவ்வொரு பஞ்சாப் கிங்ஸ் போட்டிக்கும் இந்த சலுகை செல்லும் என விதிகள் வகுத்து சூதாட்டம் என தகவல வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டால், அந்நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தநிலையில், தற்போது லட்சக்கணக்கில் நடைபெற்றுள்ள இந்த மோசடிக்கு போலீசார் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.