ஐபிஎல் 2025

IPL2025: டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது குஜராத் டைட்டன்ஸ்!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

IPL2025: டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது குஜராத் டைட்டன்ஸ்!
ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது குஜராத் டைட்டன்ஸ்
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (மே18) நடைபெற்ற 60வது லீக் கேபிடல்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ்வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய, கே.எல். ராகுல் மற்றும் பாப் டூ ப்ளசிஸ் களமிறங்கினர்.

கே.எல். ராகுல் குஜராத் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து டெல்லி மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். 65 பந்துகளை எதிர்கொண்ட கே.எல். ராகுல் 20 ஓவர் களத்தில் நின்று 4 சிக்ஸ்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 112 ரன்களை விளாசினார். மறுமுனையில், பாப் டூ ப்ளசிஸ் 5 ரன்கள் ஆட்டமிழந்த நிலையில், அபிஷேக் போரெல் 30 ரன்களை சேர்த்தார். அடுத்து கேப்டன் அக்சர் படேல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ராகுலுடன் ஜோடி சேர்ந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தார்.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரகளான சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் 19 ஓவரிலேயே 205 ரன்களை குவித்து அபார வெற்றிபெற்றனர். தமிழக வீரரான சாய் சுதர்சன் 61 பந்துகளில், 4 சிக்சர்கள் மற்றும் 12 சிக்சர்களுடன் 108 ரன்கள் அடித்து சதம் விளாசினார். மறுமுனையில் சுப்மன் கில் 7 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகல் என 53 பந்துகளில் 93 ரன்களை குவித்தார். இறுதியில் விக்கெட் இழப்பின்றி அதிரடியாக விளையாடிய குஜராத் அணி தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

குஜராத் அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், டெல்லி அணிக்கு மீதமிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்ற நிலையில் அடுத்து வரும் போட்டிகள் இன்னும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.