K U M U D A M   N E W S

நாசவேலைக்கு சதித்திட்டம்? சென்னையில் பிடிபட்ட அசாம் தீவிரவாதி

அபுசலாம் அலி சென்னையில் வேறு யாருடனாவது தொடர்பில் இருந்தாரா என தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரணை

இது காவல்துறைக்கே களங்கம்... பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை? ஆதாரங்களுடன் சிக்கிய ஐபிஎஸ் ஆபிஸர்!

சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார், பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

60 வீடுகளை அகற்ற எதிர்ப்பு - போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ்

60 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

அயனாவரத்தில் பள்ளி மாணவர்கள் மோதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

சென்னை அயனாவரத்தில் பள்ளி மாணவர் ஒருவரை வேறு பள்ளி மாணவர்கள் இணைந்து தாக்கியதால் பரபரப்பு.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. ஸ்ட்ரிக்டாக சொன்ன நீதிமன்றம்

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆவதால் மனுதாரர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என வாதம்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது- நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்.. இந்து முன்னணி பேரணிக்கு அனுமதி மறுப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

நிறைய ஹீரோயின்ஸ் என் கூட நடிக்க தயங்குனாங்க.. நடிகர் பிரதீப் ரங்கநாதன் உருக்கம்

'டிராகன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன், நிறைய ஹீரோயின்ஸ் என் கூட நடிக்க தயங்குனாங்க என்று கூறினார்.

திருச்செந்தூர் கோயில் விவகாரம் – ”கடமையை சரியா செய்யுங்க” – நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்

கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை.. திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய  வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

போத ஏறிப் போச்சு... பஸ்ச திருடியாச்சு... மாட்டிக்கிட்ட மெக்கானிக்!

சென்னையில் நள்ளிரவில் பணிமனையில் இருந்து மாநகர பேருந்தை திருடி இயக்கிச் சென்ற கார் மெக்கானிக்கை போலீஸார் கைது செய்துள்ளனர். நடத்துநர் மீதான ஆத்திரத்தில், பேருந்தை கடத்தியவர் சிக்கிக் கொண்டது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

பர்தா அணிந்து திருட்டு பெண் பட்டதாரியின் ஸ்கெட்ச் திருடியதற்கான காரணம் தான் ஹைலைட்!

சென்னையில் பர்தா அணிந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவரை தாக்கி நகையை பறித்துள்ள பெண் பட்டதாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிசிடிவியை ஆராய்ந்து பெண்ணை கைது செய்த போலீசிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் என்ன? திருட்டுக்கான பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி - இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது - டிஜிபி சங்கர் ஜிவால்

போதைப் பொருளை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம் - மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம் உத்தரவு

முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் 3 சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம் எனத் தெரிவித்த மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம், குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி.. போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி நடைபெறுவதை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

தனியாருக்கு பாதுகாப்பு வழங்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு தான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டுள்ளது

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்... பிப்ரவரி 19-ல் தீர்ப்பு..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நிற்காமல் சென்ற பேருந்து... தட்டிகேட்ட பயணியை தாக்கிய டைம் கீப்பர்... போலீசார் தீவிர விசாரணை..!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் டைம் கீப்பரிடம் தட்டிக்கேட்ட பயணி மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் புகார்களை விசாரிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை- அன்பில் மகேஸ் தகவல்

பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்றும் பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

பாடல்களுக்கு உரிமம் கோரும் வழக்கு.. உயர்நீதி மன்றத்தில் இளையராஜா ஆஜர்

பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா நேரில் ஆஜரானார்.

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்.. இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட்

பெண் காவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் சென்னை போக்குவரத்து காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்டு செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநகர பேருந்தை கடத்தி விபத்து ஏற்படுத்திய நபரால் பரபரப்பு.. அதிரடி காட்டிய போலீசார்

திருவான்மியூர் பணிமனையில் இருந்து மாநகரப் பேருந்தை கடத்தி விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இறக்கம் இன்று ஏற்றம்! இன்றைய தங்கம் விலை என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.63,840க்கு விற்பனை.

பாலியல் புகார் - இணை ஆணையர் சஸ்பெண்ட்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம்.