K U M U D A M   N E W S

கலாஷேத்ரா நடனப் பள்ளி பாலியல்  வழக்கின் விசாரணை துவங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல்  வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Mudra Scheme : முத்ரா திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

RN Ravi About Mudra Scheme : மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டத்தால் தமிழக மக்கள் அடைகின்ற வளர்ச்சியை சுட்டிக்காட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி முத்ரா திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தமிழக ஆளுநர் வடகிழக்கு மாநில மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

தங்கம் விலை கிடுகிடு உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.64,480க்கு விற்பனை.

ஏற்பாட்டில் குளறுபடி??.. சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி.

Murder Case : தகாத வார்த்தையால் திட்டியதால் காதலி தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்

Chennai Murder Case : சென்னையில் தகாத வார்த்தையால் திட்டிய காதலியின் தாயை கழுத்தை நெரித்து காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனை காண குவிந்த பக்தர்கள்

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.

வடபழனி முருகனை தரிசிக்க அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

சென்னை, வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி குவியும் பக்தர்கள் கூட்டம்.

ஓசி டிக்கெட் என்று கூறி பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதம்.. விளக்கமளித்த போக்குவரத்து கழகம்

சென்னை மாநகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணித்த பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது. 

”ஓசி டிக்கெட்” விவகாரம் - MTC விளக்கம்

சென்னை வடபழனியில் அரசுப்பேருந்தில் ஓசி டிக்கெட் என பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்த விவகாரம்.

விவசாயிகள் மேல்முறையீட்டு மனு.. வெளியேற்ற தடை விதித்த உச்சநீதிமன்றம்..!

கடலூர் மாவட்டம், மலையடி குப்பம் விவசாயிகளின் மேல்முறையீட்டு மனு மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும் வரை அவர்களை வெளியேற்ற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தாலும், கைதிகளுக்கு சாதாரண அல்லது அவசரகால விடுப்பு வழங்க தடை இல்லை -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

86,000 ஏழைகளுக்கு பட்டா - முதலமைச்சர் அதிரடி

பட்டா வழங்கும் பணியை 6 மாதங்களில் செய்து முடிக்க 2 குழுக்கள் அமைக்கப்படும் - முதலமைச்சர்

ஆபாச வீடியோ காட்டி மிரட்டல் இளம்பெண்களிடம் பணம் சுருட்டல் ஆதாரங்களுடன் சிக்கிய பாஜக பிரமுகர்!

இளம்பெண்களுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி, லட்சக்கணக்கில் பணம், நகை சுருட்டியதாக பாஜக பிரமுகரை, போலீஸார் தட்டித் தூக்கியுள்ளனர். யார் அந்த பாஜக பிரமுகர்? நடந்தது என்ன? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

ஓசி டிக்கெட் - அலப்பறை செய்த இளைஞர்கள்

சென்னை வடபழனியில் அரசுப்பேருந்தில் ஓசி டிக்கெட் என பெண்களை அவமரியாதையாக பேசி அலப்பறை செய்த இளைஞர்கள்

TN Cabinet Meeting : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

TN Cabinet Meeting : சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர்.

TN Cabinet Meeting : தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

TN Cabinet Meeting : சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் பங்கேற்பு.

தொடர் கஞ்சா விற்பனை.. வசமாக சிக்கிய பெண் வியாபாரி..  மூன்று பேர் கைது

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் நியமனம்.. கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு..!

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரி, ஆணையத் தலைவர் கடிதம் அனுப்பி 22 மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்.. கருணைத் தொகை வழங்கிய அதிகாரிகள்

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரயில்வே அதிகாரிகள் கருணைத் தொகை 50 ஆயிரத்தை வழங்கினர்.

ரூ.2000 நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பழைய இரண்டாயிரம் ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கடும் பனிமூட்டம் - சென்னைக்கு விமானங்கள் தாமதம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதம்

மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த சோகம்.., வெளியான பதைபதைக்கும் CCTV காட்சிகள்

சென்னை தேனாம்பேட்டையில் மனைவி கண் முன்னே கணவன் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... கைது செய்யப்பட்ட நாகேந்திரனின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறை துறைக்கு உத்தரவு...!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சோகம்.. நடுவானில் மலேசிய பெண்ணிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..!

மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மலேசிய பெண்ணிற்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக தரையிறங்கியும் காப்பாற்ற முடியாமல் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பறிமுதல் செய்த 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் - சுங்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.