தமிழ்நாடு

சிறுவர்களால் விபத்துகள் அதிகரிப்பு...முதியவர்களுக்கு சென்னையில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்

சென்னையில் கடந்த வாரம் சிறுவன் இயக்கிய கார் மோதி முதியவர் உயிரிழந்த நிலையில், தற்போது 16 சிறுவன் பைக் ஓட்டி முதியவர் மீது மோதியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 சிறுவர்களால் விபத்துகள் அதிகரிப்பு...முதியவர்களுக்கு சென்னையில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்
பைக் மோதி விபத்து

சென்னை சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சம்பத் (76). கடந்த 11 ஆம்தேதி இரவு அவர் மார்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி சென்றார். அப்போது சாலிகிராமம் அம்பேத்கார் தெருவில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த பைக் ஒன்று சம்பத் மீது மோதியது. அவர் சாலையில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் அவருக்கு மூக்கு, நெற்றியில் ரத்தகாயம் வலது கையில் மணிகட்டில் உள்காயமும் ஏற்பட்டது.

தகவல் அறிந்து அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 16 வயது சிறுவன் பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது. அந்த சிறுவன் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் மோதி முதியவர் உயிரிழப்பு

முன்னதாக கடந்த வாரம் சென்னை வடபழனியில் 14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிறுவன் மற்றும் அவரின் நண்பர் ஆகிய இருவரை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர்ந்து சிறுவர்கள் வாகனத்தை இயக்கி அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.