கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் சமீபத்திய காலமாக தங்கம் விலை இதுவரை இல்லாத அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை சட்டென உயர்ந்து 70,000 ஆயிரம் ரூபாயை கடந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.
பொருளாதார வல்லுநர்கள் தங்கம் விலை 35 சதவிகிதம் வரை குறையும் என்று சொல்லுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர். மேலும், இவ்வாறு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தால் நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது கனவாகவே இருக்கும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தங்கத்தின் விலை
சென்னையில் நேற்று (ஏப் 17) ஒரு கிராம் தங்கம் 95 ரூபாய் உயர்ந்து 8,815 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து 70,520 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 105 ரூபாய் உயர்ந்து 8,920 ரூபாய்க்கும் ஒரு சவரன் 840 ரூபாய் உயர்ந்து 71,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 1,10,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
10 நாட்களில் தங்கம் கடந்து வந்த பாதை
ஏப்ரல் 8 - ஒரு கிராம் 8,225 ரூபாய்க்கும், ஒரு சவரன் 65,800 ரூபாய்க்கும் விற்பனை.
ஏப்ரல் 9 - ஒரு கிராம் 8,410 ரூபாய்க்கும், சவரன் 67,280 ரூபாய்க்கும் விற்பனை.
ஏப்ரல் 10 - ஒரு கிராம் 8,560 ரூபாய்க்கும், ஒரு சவரன் 68, 480-க்கும் விற்பனை
ஏப்ரல் 11 - ஒரு கிராம் 8,745 ரூபாய்க்கும், ஒரு சவரன் 69,960 ரூபாய்க்கும் விற்பனை
ஏப்ரல் 12 - ஒரு கிராம் 8,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 70, 160-க்கும் விற்பனை
ஏப்ரல் 13 - ஒரு கிராம் 8,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 70, 160-க்கும் விற்பனை
ஏப்ரல் 14 - ஒரு கிராம் 8,755 ரூபாய்க்கும், ஒரு சவரன் 70,040-க்கும் விற்பனை
ஏப்ரல் 15 - ஒரு கிராம் 8,720-க்கும், ஒரு சவரன் 69,760-க்கும் விற்பனை
ஏப்ரல் 16 - ஒரு கிராம் 8,815 ரூபாய்க்கும், ஒரு சவரன் 70,520 ரூபாய்க்கும் விற்பனை
ஏப்ரல் 17 - ஒரு கிராம் தங்கம் 8,920 ரூபாய்க்கும், ஒரு சவரன் 71,360 ரூபாய்க்கும் விற்பனை