அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள கேசரி2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட் புக்கிங்கில் ரூ.1.86 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது.
அக்ஷய் குமார், அனன்யா பாண்டே, மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் கேசரி 2 என்ற திரைப்படம் நாளை (ஏப்.18) வெளியாக உள்ளது. கரண் சிங் தியாகி இயக்கியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் ஷாருக்கான், அமீர்கான்,சல்மான் கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் படங்கள் வெளியாகும் போது, திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஷாருக்கான் படத்திற்கான டிக்கெட் புக்கிங் அனைத்தும் சில மணி நேரங்களில் கூட விற்று தீர்த்த காலங்கள் உள்ளது.
இந்த நிலையில் 'கேசரி2' திரைப்படத்திற்காக ரசிகர்கள் ரூ.1.86 கோடிக்கு டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர். முன்னதாக நேற்றுமுன் தினம் டெல்லியில் சிறப்பு காட்சிக்கு பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் சாணக்யபுரியில் திரையரங்கில் நடந்த சிறப்பு காட்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர்.அவர்களை அக்ஷய்குமார், மாதவன் வரவேற்றனர்.
சிறப்பு காட்சியின் முன்னதாக பேசிய நடிகர் அக்ஷய்குமார் கேசரி2 திரைப்படத்தை திரையிடும்போது அனைவரும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் , “கேசரி2 திரைப்படத்தை பார்க்கும்போது, தங்கள் செல்போன்களை பைகளில் வைத்துக்கொண்டு, இந்த படத்தின் ஒவ்வொரு வசனத்தையும் கேளுங்கள் என்று நான் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வசனங்கள் நிறைய அர்த்தமுள்ளதாக இருக்கும். படம் பார்க்கும்போது இன்ஸ்டாகிராமை பார்க்க முயற்சித்தால், அது படத்திற்கு அவமானமாக இருக்கும். எனவே அனைவரும் தங்கள் செல்போன்களை கொஞ்சம் நேரம் ஒதுக்கி வைக்க கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார்.
ஜாலியன் வாலாபாக் துயர சம்பவத்தின் பின்னணியில் கேசரி 2 திரைப்படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு வெற்றி பெற்ற கேசரி திரைப்படத்தின் தொடர்ச்சியாக கேசரி2 வெளியாக உள்ளது. அனுராக் சிங் இயக்கிய கேசரி திரைப்படம் 1897ம் ஆண்டு பிரிட்டிஸ் இந்திய ராணுவத்தின் 36வது சீக்கிய படைப்பிரிவை சேர்ந்த 21 சீக்கிய வீரர்கள் 10 ஆயிரம் பேரை எதிர்த்து போரிட்டதை பின்னணியாக கொண்டதாக இருந்தது. இந்த நிலையில், கேசரி2 திரைப்படம் பாலிவுட்டில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.