நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் நடிகர் விக்ரம், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னையை செதுக்குபவர். கென்னடி என்ற இயற்பெயர் கொண்டிருந்தாலும் சியான் விக்ரம் என்றே இவர் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
பிறப்பு
கடந்த 1966-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி பரமக்குடியில் ஜான் விக்டர்-ராஜேஸ்வரி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் விக்ரம். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பள்ளி படிப்பை முடித்த இவர் சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றவர். சண்டை பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம் போன்ற பல்வேறு கலைகளில் பயிற்சி பெற்றவர் விக்ரம்.
நடிகர் விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் மாடலிங் ஆக நடித்து வந்துள்ளார். பின்னர், 1988-ஆம் ஆண்டு ‘கலாட்டா குடும்பம்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இதைத்தொடர்ந்து, 1990-ஆம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் பல படங்களில் நடித்தாலும் இவரது நடிப்பு பெரிய அளவில் கவனம் பெறவில்லை.
தனக்கான இரைக்காக காத்திருக்கும் கழுகு போல தனக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்காக காத்திருந்து 9 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘சேது’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் விக்ரமிற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. விக்ரமின் திரையுலக வாழ்க்கையை ‘சேது’விற்கு முன் ‘சேது’விற்கு பின் என இரண்டு பாகங்களாக பிரிக்கலாம். இந்த படத்தில் தலையை மொட்டையடித்து, உடல் எடையை குறைத்து எந்த கதாநாயகனும் செய்ய தயங்கும் கதாபாத்திரத்தை விக்ரம் ஏற்று நடித்திருப்பார். பல தடைகளை தாண்டி வெளியான ‘சேது’ படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரம் ‘சியான்’ விக்ரம் என்று அழைக்கப்பட்டார்.
திரையுலகில்வெற்றி
’சேது’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விக்ரமிற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘தில்’, ‘சாமுராய்’, ‘ஜெமினி’, ‘சாமி’ போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். மீண்டும் இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘பிதாமகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கான இடத்தை பெற்று தந்தது. சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த ‘அந்நியன்’, ‘ஐ’ போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவ்வாறு தனது கடின உழைப்பால் திரைத்துறையில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் விக்ரம்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்துள்ளார். கமல்ஹாசனின் 'குருதிப் புனல்' படத்தில் ஒரு தீவிரவாதி கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். அதன் பின், பல வருடங்கள் கழித்து கமல் தயாரித்த 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்திருக்கிறார். சினிமா தவிர போட்டோகிராபி, வெளிநாட்டு பறவைகள் வளர்ப்பு என வித்தியசமான பொழுதுபோக்கில் சிறகடிப்பார்.
விருதுகள்
சிறந்த நடிகருக்கான தேசிய விருது, மாநில விருதுகள் என பல்வேறு விருதுகளை நடிகர் விக்ரம் பெற்றுள்ளார். 'பிதாமகன்' படத்தில் நடிகர் விக்ரம் உதவி இயக்குநராக வேலை செய்ததாகவும் அதன் டைட்டில் கார்டில் விக்ரம் பெயரை இயக்குநர் பாலா இணை இயக்குநர் என்று போட விரும்பிய நிலையில் விக்ரம் அதை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இயக்குநராக வேண்டும் என்ற கனவை மறந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த விக்ரமின் நடிகர் பயணம் இன்று வரை தொடர்கிறது.