தொடர் தோல்வியில் சிஎஸ்கே
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் தொடர்ந்து இன்று நடைபெறும் ஆட்டத்தில் மோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்றுள்ளது. இதனால் சென்னை அணிக்கு மிகவும் நெருக்கடியான காலகட்டமாக மாறி உள்ளது. இதில் என்ன பெரிய சோகம் என்றால் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்றுள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சிஎஸ்கேவின் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், மூத்த வீரரான தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார்.ஆனால் அவரது முதல் ஆட்டமே சோதனையாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் லக்னோவில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மீண்டும் சிறப்பாக ஆடி சிஎஸ்கேவை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சிஎஸ்கேவில் பவர் ஹிட்டர்கள் இல்லாதது பாதகமாக உள்ளது. பவர் பிளேவில் 60 ரன்கள் இலக்கு என்பது சவாலானதாக உள்ளது என தோனி ஒப்புக்கொண்டுள்ளனார். மேலும் ஆல் ரவுண்ரான ரவீந்திர ஜடேகாவும் சரிவர சோபிக்காதது சிஎஸ்கேவுக்கு பலவீனமாக அமைந்துள்ளது.அதேபோல் தோனியின் பேட்டிங் வரிசை மாற்றப்படுவதும் ரசிகர்களிடையே குழப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் எது எப்படியோ லக்னோவை இன்றைய போட்டியில் சென்னை அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.