தமிழ்நாடு

4 மாதத்தில் 3628 கிலோ கஞ்சா அழிப்பு.. போலீசாரின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

நடப்பு ஆண்டில் இதுவரை தமிழகத்தில் சிக்கிய 3628 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாக மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

4 மாதத்தில் 3628 கிலோ கஞ்சா அழிப்பு.. போலீசாரின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
4 மாதத்தில் 3628 கிலோ கஞ்சா.. போதைப்பொருள் போலீசாரின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் 187 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2215.71.கி, உலர் கஞ்சா, 58 கி.கி. சாராஸ், 1 கி.கி ஹெராயின், 1.4 கி.கி கஞ்சா சாக்லெட் போன்ற போதைப்பொருட்கள் அனைத்தும் செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் இன்று எரிக்கப்பட்டது.

இந்தாண்டில் இதுவரை 253 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3628.71 கி.கி. உலர் கஞ்சா, 74.150 கி.கி ஹசிஷ், 58 கி.கி. சாராஸ், 1 கி.கி ஹெராயின், 1.4 கி.கி கஞ்சா சாக்லெட்கள் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் எரிக்கப்பட்டது.

இதனை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையிலான போலீசார் போதை மருந்துகள் அழிக்கும் செயல்முறையை கண்காணித்தனர். போதைப்பொருள்கள் மற்றும் போதைப்பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை தெரிந்தால் பொதுமக்கள் 10581 மூலம் மற்றும் வாட்ஸ்அப் எண் 9498410581 அல்லது மின்னஞ்சல் முகவரி [email protected] மூலம் தெரிவிக்கலாம் என்று மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், தமிழகத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.