K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

உயர்ந்த விமானக் கட்டணம்.. உறைந்து போன பயணிகள்

மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருவனந்தபுரம் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம்.. சிறப்பு புலனாய்வு குழுவை நியமனம்..!

கோவையில் யானை வழித்தடத்தில்  மண் எடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. முதல்வர் VS எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவையில் காரசார விவாதம்..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடங்கி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வரை முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித்தலைவருக்கும் இடையிலான விவாதம் இறுதியில் சவாலில் நிறைவடைந்தது. 

தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - திருமாவளவன்

எங்களை ஜாதியை பாகுபாடு காட்டி ஓரங்கட்டப்பட்டாலும், ஒதுக்கி வைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் தான் மைய புள்ளி என்றும், தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. முதல் நாளில் 3 சுயேட்சைகள் வேட்பு மனுத்தாக்கல் ..!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாள் வேட்புமனுத்தாக்கலின் போது, 3 சுயேட்சைகள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. 20-ஆம் தேதிக்குள் விரிவான பட்டியலை வழங்க அறிவுறுத்தல்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் வரும் 20-ஆம் தேதிக்குள் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பான விரிவான பட்டியலை வழங்க வேண்டும்  என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை.. சட்ட திருத்த மசோதா  நிறைவேற்றம்..!

தமிழ்நாட்டில் பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதாவையும், தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு.. புலன் விசாரணை நடத்த உத்தரவு..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் தொகுப்போடு இரண்டாயிரம் வழங்க கோரிக்கை.. பாஜக மனுவை நிராகரித்த நீதிமன்றம்

பொங்கல் தொகுப்புடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்க கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த மசோதா.. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்ட திருத்த மசோதா இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு குறித்து விசாரணை.. தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

பீப் கடை விவகாரம் : பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு.. பொதுமக்கள் சாலை மறியல்..!

பீப் கடை விவகாரகத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு  ஏற்பட்டது.

6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகிவிட்டது என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் - துணைமுதல்வர் பேச்சு

பொள்ளாச்சியில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரித்துதான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தது. அதே போல், முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை நிலவரம் அப்டேட்

தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான்.. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி

பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தான் தரும் என்றும், இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தின் மீது ஏறி பேருந்து பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி

சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களை அரசின் நேரலை பக்கத்தில் பதிவு செய்யாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 

பனையூரில் நாளை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தீர்மானம்.. அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

சட்டப்பேரவை வினா-விடை நேரம்.. ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்துள்ளது- அப்பாவு விமர்சனம்

சட்டப்பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தின் போது மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது சொந்த ஊரில் சிலை நிறுவ வேண்டும் என அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்த நிலையில், ஆட்சியில் இருக்கும் போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்தார்.