அஜித்குமாருக்கு விருது
டெல்லியில் நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோருக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பத்மபூஷன் விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நடிகர் அஜித்திற்கு வழங்கினார். முன்னதாக விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் அஜித் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் டெல்லி சென்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில் அஜித் பத்மபூஷன் விருது வாங்கும் பெருமைமிக்க தருணத்தைக் காண அவரது மனைவி ஷாலினி மற்றும் அவர்களது குழந்தைகளும் வந்திருந்தனர்.
பத்மபூஷன் விருது வாங்கிய நடிகர் அஜித்குமாருக்கு திரையுலகை சார்ந்தவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்.22ம் தேதி மினி சுவிட்சர்லாந்து என்றும் அழைக்கப்படும் காஷ்மீரில் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜம்மு-காஷ்மீரில் நடந்த பஹம்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நடிகர் அஜித்குமார் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
பிரார்த்தனை செய்கிறேன்
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, "பஹல்காமில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்துக்கொள்கிறேன்.அனைத்து குடும்பங்களுடனே என் இதயம் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன். அரசாங்கம் தங்களால் இயன்றதைச் செய்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் அனைவரும் நமது கரங்களை பிடித்துக்கொண்டு வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அமைதியான சமூகமாக வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம்" என்று கூறினார்.
தேசத்தைப் பாதுகாப்பதில் இந்திய ஆயுதப் படைகளின் அயராத முயற்சிகளை அங்கீகரித்து, அஜித் மேலும் அவர்களை கௌரவித்தார். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், “ஆயுதப் படைகளைச் சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், அதனால் நாம் நிம்மதியாக தூங்க முடிகிறது.
அமைதியான சமூகமாக இருப்போம்
என் இதயம் அவர்களுக்காக துடிக்கிறது, மேலும் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஒரு அழகான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். அவர்கள் நமது எல்லைகளைப் பாதுகாக்க மிகவும் அயராது உழைக்கிறார்கள், குறைந்தபட்சம் அவர்களை மதிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சமூகத்தையும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும், குறைந்தபட்சம் நமக்குள் சண்டையிடாமல்,அமைதியான சமூகமாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.