ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பாடி அருகே ஆற்காடு - புதுச்சேரி செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.
போலீசாரை கண்டதும் பேருந்தில் இருந்து இரு இளைஞர்கள் கீழே இறங்க முயற்சித்ததால் அவர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் அவர்கள் வைத்திருந்த இரு மூட்டைகளில் 60 கிலோ ஹைபிரிட் வகை கஞ்சா போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு இளைஞர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் இருவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திடாரி வசந்த் குமார்(24), கெமிலி சந்து(25) என்பது தெரிய வந்தது.
மேலும் இருவரும் ஆந்திராவில் இருந்து பாண்டிச்சேரிக்கு ஹைபிரிட் வகை கஞ்சா போதைப்பொருளை எடுத்து சென்று நட்சத்திர ஹோட்டல்களில் விற்பனை செய்வது விசாரணையில் உறுதியானது. இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரு இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.