தமிழ்நாடு

Find my device ஆப் மூலம் காணாமல் போன செல்ஃபோனை கண்டுபிடித்த பெண்!

நெற்றியில் தாக்கிவிட்டு, வைத்து தாக்கி செல்போனை பறித்து சென்ற கும்பலை, find my device ஆப் மூலம் சில நிமிடங்களில் செல்போன் பறித்துசென்ற திருடர்களை துரத்தி பிடித்த செல்போன் பறிகொடுத்தவரின் மனைவி மீட்டுள்ளார்

Find my device ஆப் மூலம் காணாமல் போன செல்ஃபோனை கண்டுபிடித்த பெண்!
கணவரை தாக்கிவிட்டு செல்போனை பறித்து சென்ற கும்பலை துணிச்சலுடன் சாதுர்யமாக செயல்பட்டு கும்பலை பிடித்து கொடுத்து செல்போனை மீட்ட சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. சென்னை ஓட்டேரி நியூ டேங்க் பங்க் சாலையில் வசித்து வருபவர் ராஜ்குமார் (41), இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்றிரவு தனது வீட்டருகே செல்போன் பேசிக்கொண்டு இருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, ராஜ்குமாரை வழிமறித்து நெற்றியில் தாக்கிவிட்டு பணம் கேட்டுள்ளனர், பின்னர் பணமில்லை ராஜ்குமார் தெரிவித்ததால் செல்போனை பறித்து விட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளனர்.

இதனை கண்ட அருகிலிருந்தோர் உடனடியாக ராஜ்குமாரின் மனைவி சர்மதாவிற்கு இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில், அவரது செல்போனில் find my location ஆப் மூலமாக கணவரின் காணாமல் போன செல்போனின் லொக்கேஷனை பார்த்துள்ளார். அப்போது அந்த தெரு முனையில் செல்போன் இருப்பது காண்பித்ததால் உடனடியாக அங்கு பொதுமக்களுடன் சென்று சர்மதா அந்த நான்கு நபர்களிடம் இருந்து அவரது கணவரின் செல்போனை வாங்கி உள்ளார். இதையடுத்து பொதுமக்கள் அந்த நபர்களை தாக்கிய நிலையில், ஒருவர் தப்பியோட மூன்று பேரையும் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். ஓட்டேரி போலீசார் அவர்களது பைக்கை திறந்து பார்த்த போது 4 செல்போன்கள், பட்டாக்கத்திகள் இருந்துள்ளது.

ஏற்கனவே தனது கணவரின் மொபைல் போனை பறித்து சென்றதால் தற்காப்பிற்காக find my location ஆப்பை பதிவிறக்க செய்து வைத்ததாகவும், தகவல் வந்தவுடன் துரத்தி சென்ற போது அந்த நபர்களின் பைக்கில் பெட்ரோல் இல்லாமல் நின்றது தெரியவந்து பொதுமக்களுடன் சேர்ந்து பிடித்து கொடுத்ததாக துணிச்சலாக செயல்பட்ட சர்மதா தெரிவித்துள்ளார், எல்லா பெண்களுடன் துணிச்சலாக செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிடிபட்ட மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அயனாவரத்தை சேர்ந்த வசந்தகுமார் 23 மற்றும் விக்னேஷ் 19, 17 வயது சிறுவன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஏற்கனவே வசந்தகுமார் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இவர்கள் போதையில் அந்த பகுதியில் அமர்ந்திருந்த நபர்களிடம் மிரட்டி பணப்பரிப்பில் ஈடுபட்டதும் பின்னர் செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்ற போது, திருட்டு வண்டியில் பெட்ரோல் இல்லாமல் நின்று மாட்டிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் பிடிப்பட்ட மூன்று பேரிடமும் ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.