ரோபோடிக் காப்
சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக காவல்துறை சார்பில் காவலன் ஆப் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ரோபோடிக் காப் என்ற திட்ட புதிய பாதுகாப்பு சாதனத்தை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தப்பட உள்ளது. 24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும்.சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பில் இருக்கும். இதன் மூலம் உடனடியாக காவல் துறைக்கு அழைப்பும், அருகில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் முடியும்.
சென்னை போலீஸ் திட்டம்
ஆபத்தில் உள்ளவரை காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வசதி உள்ளது. வீடியோ கால் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சாதனத்தை பொருத்த சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.