தமிழ்நாடு

பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு!

மதுரையில் மழலையர் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து, நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தாளாளர், ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு!
மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் என்பவரது நான்கு வயது மகள் ஆருத்ரா ஸ்ரீ. இவர் மழலையர் பள்ளியில் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பள்ளி வளாகத்தில் சுமார் 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்துள்ளார்.

மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் நான்கு வயதுடைய ஆருத்ரா என்ற குழந்தை பயின்று வந்தார். வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்குச் சென்ற ஆருத்ரா, தனது நண்பர்கள் உடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 30 நிமிடங்களாக தண்ணீரில் கிடந்த குழந்தையை தீயணைப்புத்துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்ததை கேட்டு, அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பள்ளியில் 4 ஆசிரியர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பள்ளியில் பயிலும் கூடிய மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு வருகை தந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சியின் போது 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் ஆருத்ரா 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முறையாக அனுமதியுடன் மழலையர் பள்ளி இயங்கியதா என்பது குறித்தும் முறையான பாதுகாப்பு வசதிகள் உடன் பள்ளி இயக்கப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் மழலையர் பள்ளியில் ஆர்டிஓ ஷாலினி தலைமையில் நடைபெற்ற விசாரணை பிறகு பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 4வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் அலட்சியமாக இருந்ததாக தனியார் மழலையர் பள்ளியின் பள்ளி தாளாளர் திவ்யாராஜேஸ், மற்றும் பள்ளி பணியாளர்கள் மேனகா, ஐஸ்வர்யா, ஜெயபிரியா, சத்யபவானி, சித்ரா, சரிதா ஆகிய 7 பேரிடமும் அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அனுமதி இன்றி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.