தமிழ்நாடு

பொள்ளாச்சி வழக்கு.. நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு வழங்குவதில் சிக்கலா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டப்படி மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி வழக்கு.. நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு வழங்குவதில் சிக்கலா?
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அந்த வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்திருந்தார். இதனிடையே, நீதிபதி நந்தினி தேவியை கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி தலைமைப் பதிவாளர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் அறிவித்தப்படி தீர்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பொள்ளாச்சி வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீதிபதி பணியிடமாற்றம் தொடர்பாக நேற்றைய தினம் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், அடுத்ததாக இது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி அந்த பொறுப்பை ஏற்க முடியும். மேலும், தற்போதைய பொறுப்பில் இருந்து அந்த நீதிபதி விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த நடைமுறைகளுக்கு சிறிது காலம் ஆகும் என்பதால் அறிவித்தப்படி பொள்ளாச்சி வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.