காவலர் நாள் கொண்டாடப்படும்
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டம் – ஒழுங்கை பாதுகாத்து இரவு பகலாக வேலை செய்யும் காவல்துறையினருக்கான தனி நாளை அறிவிக்க விரும்புகிறேன். 1859ம் ஆண்ட் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6ம் நாள் காவலர் நாள் கொண்டாடப்படும். இந்த நாளில் கடமை, கண்ணியத்தை பின்பற்றி சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு காவலர் நாளில் விருதுகள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காட்சிகள் நடத்தப்படும். ரத்த தான முகாம்கள் நடத்தப்படும்” என்றார்.
தமிழகத்தில் அமைதியான சூழல்
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதற்கு காவல்துறைதான் காரணம். சட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்கள் எண்ணத்தில் மண்தான் விழுந்திருக்கிறது.
அதேப்போல் சாதி, மதக்கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள், ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி என பல தடைகளை தாண்டி அரசு சாதனை படைத்து வருகிறது. இது கட்சியின் அரசு அல்ல, ஒரு கொள்கையின் அரசாக என செயல்பட்டு வருகிறோம். இது தனிமனித சாதனை அல்ல, அமைச்சரவையின் சாதனை” என தெரிவித்தார்.