தீபாவளி கொண்டாட்டம்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
நாடு முழுவதும் நாளை (அக். 31) தீபாவளி பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் நாளை (அக். 31) தீபாவளி பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
"விஜய்க்கு கோபம் வருவதற்க்காகத்தான் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறினாரா? என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநாட்டில் விஜய் கையில் கொடுக்கப்பட்டது சோழர் காலத்து வடிவிலான வீரவாள் எனவும், அதில் வெள்ளி முலாம் பூசப்பட்டு ஐம்பொன்னால் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த வாளை வடிவமைத்து கொடுத்த சுவாமிமலை சிற்பக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசை போன்று திமுக அரசும் பாசிசம் தான்; பாசிசம் அல்லாமல் பாயாசமா? நடிகர் விஜய் கூறியது சரிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக, தனது கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தலைவர் விஜய். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுப்போம், 2026 தான் நமது இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சொன்ன ஒரு விஷயம் திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.வை எதிர்ப்பதில் விஜய் உறுதியாக இருக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் நடித்து உயர்ந்த கதாநாயகன் அல்ல இந்த திருமா என்று விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்காக சென்ற அக்கட்சி நிர்வாகிகள் சீனிவாசன், கலை ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். ஆனால், அவர்களுக்கு விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என பலியானவர்களின் குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு, ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி திமுகவிடம், ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ்.
அஷ்டம சனி நடக்கும் வேளையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலைவர் கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு திமுக மக்களை ஏமாற்றுவதாக, தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விஜயின் கோட்பாடுக்கு விசிக-வினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக, காங்சிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று வெளிப்படையாக பேசவில்லை ஆனால், விஜய் முதல் முறையாக கூட்டணியை முன் வைத்துள்ளார் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க சென்ற ரசிகர்கள், விஜய்யின் திரைப்படத்தை காணச் சென்றது போல நடந்து கொண்டதால், மாநாடு கட்டுப்பாடற்று காணப்பட்டது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாகனங்களில் விஜய்யின் பாடல்களை ஒலிக்கவிட்ட வண்ணம் சென்றனர்.
இப்போ இணையத்தளத்த திறந்தாலே அங்க தவெக மாநாடும், தளபதி விஜய்யும் தான் டிரெண்டிங்கே. ஒரு மாநாட்டுக்கு ஏன் இவ்வளவு ஹைப்-னு நீங்க யோசிக்கலாம். ஆனா இதவிட பெரிய ஹைப் சோஷியல் மீடியா இல்லாத காலத்துலயே, அதாவது 2005லயே ஒரு மாநாட்டுக்கு இருந்துச்சு. வழக்கமா மாநாடுகள பெரிய அளவுல செய்ற அதிமுக, திமுக மாநாடு இல்ல. கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு திடீர்னு சொல்லி அதுக்கு ஒரு மாநாட்ட நடத்து கேப்டன் விஜயகாந்தோட மாநாடு தான் அது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், முக்கியமாக பார்க்கப்படுவது மாநாட்டு திடலில் வைக்கப்பட்டு இருக்கும் பிரமாண்ட கட்அவுட்கள் தான். கட்அவுட் நடுவில் விஐய் இருக்க அவரது வலதுபுறத்தில், தந்தை பெரியார், காமராஜர், வேலு நாச்சியார் இருக்க இடது புறத்தில் அம்பேத்கர், சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களை அனைவரும் அறிந்திருக்க யார் இந்த அஞ்சலை அம்மாள்.... விஜய் மாநாட்டில் இவரின் கட்அவுட் வந்தது எப்படி பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தவெக மாநாடு இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் நேற்று (அக்.26) இரவு முதலே ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மாநாட்டுத் திடலுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.
வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து அதன் விற்பனையை குறையவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநரை திரும்பப் பெற கோரிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை இடை நீக்கம் செய்வாரா? என தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது. அரசியலாக்குவதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்!” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.