K U M U D A M   N E W S

அரசியல்

திமுக தொடர்ந்து ஜெயித்ததாக வரலாறு இல்லை- MLA ராஜன் செல்லப்பா பேச்சு

"தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற திமுகவின் ஆசை கனவிலும் நிறைவேறாது: திமுக ஒருமுறை ஜெயித்தால் அடுத்த முறை ஜெயித்ததாக வரலாறு இல்லை" என மேலூர் அருகே நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.

முருகன் மாநாட்டினால் பாஜக ஆட்சிக்கு வருமா? முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி

”திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார். வைகைச்செல்வன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். வைகைச்செல்வன் கூறிய கருத்து அவருடைய விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்” என காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

குண்டு போட்ட வைகைச்செல்வன்.. சிதறும் அறிவாலய கூட்டணி..? நழுவும் திருமா?

திமுக கூட்டணி குறித்து பேட்டியளித்த வைகைச்செல்வன் பெரிய குண்டைத் தூக்கி போட்டுள்ளார். அப்படி அவர் கூறியது என்ன? சிதறப்போகிறதா அறிவாலய கூட்டணி? இதனால் அறிவாலயம் அலறிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

வைகைச் செல்வனுடன் சந்திப்பு.. அரசியல் எதுவும் பேசவில்லை- திருமாவளவன் விளக்கம்

வைகைச் செல்வன் உடனான சந்திப்பு "நட்பின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என திருமாவளவன் கூறினார்.

தமிழர் நாகரிகம் எரிமலை போன்றது.. தவெக எச்சரிக்கை

தமிழ், தமிழர் நாகரிகம் என்பது எரிமலை போன்றது என்றும் கீழடி விவகாரத்தில் வீணாக கை வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தவெக எச்சரிக்கை விடுத்துள்ளது.

காதில் பூ சுற்றும் நயினார் நாகேந்திரன்.. செல்வப்பெருந்தகை விமர்சனம்

மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, பாஜகவின் அரசியல் மாநாடு அல்ல என்று காதில் பூ சுற்ற நயினார் நாகேந்திரன் முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணியில் ஓட்டையா? வைகைச்செல்வன் கொடுத்த ட்விஸ்ட்

சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமைச்சரின் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன?.. அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சரின் வாக்குமூலம் குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே உடனடியாக நடத்த வேண்டும் எனவும், சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விஎழுப்பியுள்ளார்.

இந்த முறை முதல்வர் காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை.. ஆர்.பி.உதயகுமார் அட்டாக்

தன் அப்பா மடியில் ஊர்ந்து, தவழ்ந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் கொத்தடிமையாக உள்ள நேருவிற்கு உழைப்பை பற்றி என்ன தெரியும்? என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஸ்டிக்கர்’ ஒட்டி பழகிப்போன முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்

மதுரை எய்ம்ஸ் 2026-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென்ற செய்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'கிலி' ஏற்படுத்தியுள்ளது" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு கண்துடைப்பாக இருக்கக்கூடாது.. விஜய் வலியுறுத்தல்

"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..? அரசியலில் இருந்து விலகலா?

நாட்டாமை பாதம் பட்டா எங்க வெள்ளாமை வெளையுமடி.. நாட்டாமை கை அசஞ்சா மாசம் நாலு மழ பொழியுமடி.. என்று சினிமாவில் பாரி வள்ளலாக வலம்வந்த சரத்குமார், தற்போது பாஜகவில் ஐக்கியமான நிலையில் கடன் தொல்லையால் கடும் சங்கடத்தில் இருக்கிறாராம். நாட்டாமைக்கே இப்படி ஒரு நிலைமையா என்று குமுறுகின்றனர் அவரை நம்பி பாஜகவில் இணைந்த முன்னாள் ச.ம.கவினர்…

தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வர்.. இபிஎஸ் காட்டம்

"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2026-ல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் – நயினார் நாகேந்திரன்

வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு 117 சீட்ஸ்..? டெல்லிக்கு அண்ணாமலை அனுப்பிய நோட்டீஸ்.! உச்சக்கட்ட கடுப்பில் எடப்பாடி..!

2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றால், அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் சரிபாதி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

திமுக அரசின் கபட நாடகம்.. டிடிவி தினகரன் விமர்சனம்

வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழை அழித்தவர்கள் திமுகவினர்.. எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது.. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

தமிழகத்தில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது என்றும், ஏதோ பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ் எம்.எல்.ஏ. பதவிக்கு சிக்கல்.. சபாநாயகர் அப்பாவு பதில்

ஓ.பன்னீர் செல்வத்தின் எல்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி அவரது தொகுதியை சேர்ந்த நபர் அளித்த புகாரின் பேரில் சட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்தோம்.. செல்லூர் ராஜு பேட்டி

"பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு 'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தோம்" என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

எனது அறிக்கைகள் முதல்வரை உறுத்துகிறது.. இபிஎஸ் பதிலடி

"கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்தபடி கூறுவதுதான் அரைவேக்காட்டுத் தானம் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.