அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த நிலையில், "ஓபிஎஸ் நீக்கம் என்பது தனது தனிப்பட்ட முடிவல்ல, அது கட்சியின் பொதுக்குழு எடுத்த முடிவு" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
பொதுக்குழுவின் முடிவு; மாற்றமில்லை!
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுக-வில் இணையும் விழாவில் பங்கேற்ற இபிஎஸ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 2,500 உறுப்பினர்கள் ஏகமனதாக எடுத்த முடிவின்படி, ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டுவிட்டார். இந்த நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்குச் சிறிதும் வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.
2026 தேர்தல் இலக்கு: 210 தொகுதிகள்!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசிய இபிஎஸ், "வருகிற தேர்தலில் அதிமுக-தான் ஆட்சி அமைக்கும். தேமுதிகவுடன் இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்த பிறகு தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும். 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.
"கால்களைப் பார்த்தால்தான் சரியாக நடக்க முடியும்" - முதல்வருக்குப் பதிலடி
"பழனிசாமி எப்போது பார்த்தாலும் கால்களையே பார்க்கிறார்" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, இபிஎஸ் பதிலடி கொடுத்தார். "கால்களைப் பார்த்தால்தான் சரியான பாதையில் நடக்க முடியும். நாங்கள் உங்களைப் போன்று கையைப் பிடிக்கவில்லை; மரியாதையை எதிர்பார்க்கிறோம். மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும், இல்லையென்றால் எங்களுக்கும் பேசத் தெரியும்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.

LIVE 24 X 7