ஐந்து பேரோடு வாழ்பவர்கள் வடநாட்டவர்கள்.. இதுதான் உங்க நாகரீகம்.. துரைமுருகன் விமர்சனம்
வடநாட்டவர் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு 4, 5 பேரோடு வாழ்பவர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடநாட்டவர் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு 4, 5 பேரோடு வாழ்பவர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 19 கட்சி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.முன்னதாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.
அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்ப திமுக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக விமர்சனத்திற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக இந்த பிரச்னை சென்று கொண்டிருப்பதால் இந்த கருத்தில் உண்மையில்லை என்றார்
தமிழகத்தில் நம்மை ஆளுகிறவர்களுக்கு படிப்பறிவு இல்லை என்கின்ற நிலையில், நம் குழந்தைகளுக்காவது நல்ல படிப்பறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் பாஜக தேசிய கல்விக் கொள்கையை கையில் எடுத்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.
தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.
21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இனி 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்தார்.
பிஎம்-ஸ்ரீ பள்ளி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள கடிதத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்துவதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் குற்றம்சாட்டியுள்ளது.
PM SHRI திட்டத்தை தமிழக அரசு ஒப்புக்கொண்டதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்றத்திலுள்ள திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு தொகுதி மறுவரையறை பிரச்சினையை ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்றும் அவரது இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
நாம் போராடி போராடி தான் இன்று இந்த அங்கீகாரத்தை பெற்றிக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாஜிக்கள் அண்ணாமலை வசம் வந்துவிட்டதாகவும், அதிமுகவின் பலமாக கருதப்படும் கொங்கு மண்டலம் பாஜக கண்ட்ரோலில் சென்றுவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் நேரடியாக சென்று பேச வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
நாம் எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார் அப்டேட்டாக இல்லை என்று மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் கலகக் குரல் எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜகவுடனான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவுடனான கூட்டணிக்கு அண்ணாமலையும் மழுப்பலாக பதில் சொல்லி இருப்பது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. தாமரையுடன் இணைகிறதா இரட்டை இலை? சிவராத்திரிக்கு பிறகு அடுத்தடுத்து, தலைவர்கள் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?