இபிஎஸ்காக நள்ளிரவில் தியானம் – சிறப்பு பூஜை செய்த முன்னாள் அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.
”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.
கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்யை சந்தித்து கோரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு, ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக் கொள்கிறோம் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம் என அன்புமணி எக்ஸ் தளப்பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தலுக்கு முன்பாக பணப்பட்டுவாடாவிற்கு பாஜக ரெடியாக இருப்பதாகவும், அதற்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை வெயிட் செய்ய வேண்டும் என்றும் அப்டேட் கொடுத்துள்ள அமித்ஷா, பாஜகவினருக்கு சில முக்கிய டாஸ்குகளை கொடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.
”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
"அதிமுக- பாஜக கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் கூடுதல் தொகுதி கேட்பதும் நியாயமான விருப்பம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.
த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது சர்ச்சையினை கிளப்பிய நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்.
”கள்ளின் ஆபத்தின் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தமிழக அரசு ’கள் இறக்கும்’ போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
வரப்போகிற சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குமுதம் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுவதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.