சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டு, உற்சாகமாகச் சிலம்பம் சுற்றியதுடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கொளத்தூரில் சிறப்பு உற்சாகம்
கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், மக்களுக்குப் பொங்கல் பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கியதுடன், பசுக்களுக்கு உணவளித்து உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கு நடந்த சிலம்பப் பயிற்சியில் பங்கேற்ற அவர், தானே உற்சாகமாகச் சிலம்பம் சுற்றியதைக் கண்ட சிலம்பப் பயிற்சி மாணவர்கள் மற்றும் கட்சியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை எழுச்சியோடு கொண்டாடுகிற இந்த நேரத்தில் கொளத்தூர் தொகுதியில் இருக்கக்கூடிய கட்சியினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் வேறு எந்த நிகழ்ச்சியில் அடையும் மகிழ்ச்சியை விட, கொளத்தூரில் நடக்கும் நிகழ்ச்சியில் எனக்கு ஒரு 'எனர்ஜி' வந்து விடுகிறது," என்று தனது தொகுதியுடனான பிணைப்பை வெளிப்படுத்தினார்.
தேர்தல் பணி 50% முடிந்தது
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு ஆற்றிய சாதனைகளை மக்கள் இடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறிய முதல்வர், "ஏற்கனவே நீங்கள் (கட்சியினர்) தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீதம் முடித்துவிட்டீர்கள், இன்னும் 50 சதவீதம் தான் பாக்கி இருக்கிறது" என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பா.ஜ.க.வில் உள்ளவர்கள் கூட, தி.மு.க.வினர் போல் யாரும் வேலை செய்ய முடியாது என்று பாராட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஏற்கனவே நான் 200 தொகுதிகளுக்குக் குறையாமல் வெற்றி பெறுவோம் என்று சொல்லி இருந்தேன். நமது கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். இப்பொழுது நாம் செய்து இருக்கும் பணிகளை எல்லாம் பார்க்கும்போது, 200 தொகுதிகளையும் தாண்டி வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது," என்று தெரிவித்தார். இந்த நம்பிக்கையுடன் பொங்கல் விழாவை கொண்டாடும் நேரத்தில், வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு உறுதி எடுப்போம், சபதம் எடுப்போம் என்று கூறினார்.

LIVE 24 X 7