தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு
கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக ஐ. பெரியசாமி பதவி வகித்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் (பழனி தி.மு.க. எம்.எல்.ஏ.), மகள் இந்திரா உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், சொத்து ஆவணங்கள், முதலீட்டு விவரங்கள், வங்கிக் கணக்குகள் போன்றவற்றை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர்.
உயர்நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
சோதனையைத் தொடர்ந்து, சொத்துக்களை முடக்கம் செய்வது குறித்து விளக்கம் கேட்டு அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணையை எதிர்த்தும் ஐ. பெரியசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து முடக்கம் தொடர்பான விசாரணை அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத் துறையை அணுகும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

LIVE 24 X 7