தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவு, திமுக தலைமையிலான கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'அதிகாரப் பகிர்வு' குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜோதிமணிக்குப் பிறகு மற்றொரு அதிர்வு
காங்கிரஸ் தலைமை திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வரும் சூழலில், தவெகவுடன் காங்கிரஸ் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக வந்த தகவலைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மறுத்திருந்தார்.
இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒரு சிலரின் சுயநலத்தினால் அழிவின் பாதையில் செல்கிறது என்று அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி பகிரங்கக் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அந்தக் குழப்பம் ஓயாத நிலையில், மற்றொரு எம்.பி.யான மாணிக்கம் தாகூரின் பதிவு வெளியாகியுள்ளது.
மாணிக்கம் தாகூரின் பதிவு சொல்லும் செய்தி
எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில் தனியார் கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் தரவுகளைப் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
"யாருக்கு வாக்கு?” – தனியார் கருத்துக்கணிப்பு நிறுவனம் தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்தத் தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளையும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே"
மாணிக்கம் தாகூரின் இந்த 'அதிகாரப் பகிர்வு' என்ற வார்த்தை, கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்பதை மறைமுகமாகக் கூறுவதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. அவரது இந்தப் பதிவு, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி, தமிழக அரசியலில் மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

LIVE 24 X 7