நாங்க எப்படி போராட்டம் நடத்துனோம்? தவெகவுக்கு வன்னி அரசு அட்வைஸ்
”தமிழக வெற்றிக் கழகம் வெறும் ரசிகர்களை உருவாக்காமல் முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
”தமிழக வெற்றிக் கழகம் வெறும் ரசிகர்களை உருவாக்காமல் முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
”எடப்பாடி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கிறார். சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி” என கடுமையாக தாக்கி பேசியுள்ளார் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி.
முதலமைச்சர் ஸ்டாலின் காவிக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் என்று நடிகர் விஜய் குற்றஞ்சாட்டியது குறித்த கேள்விக்கு, கனிமொழி எம்.பி. பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.
திமுக ஆட்சி ஃபெயிலியர் ஆட்சி என்றும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை
வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வேண்டும், 2026-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என பழங்குடியினர் வழிபடும் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர் திமுகவினர்.
“மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்” என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
“திமுக சர்கார், தற்போது ‘சாரி மா’ மாடல் சர்காராக மாறிவிட்டது” என்று விஜய் விமர்சித்துள்ளார்.
‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
“ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது" என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சத்துணவு அமைப்பாளர் தற்கொலை வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
"தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
விசைத்தறியாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா? என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
“தான் நினைந்து நடக்கவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்” என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
“உங்களுக்காக நான் இருக்கிறேன்.. எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை” என தொண்டர்களுக்கு அன்புமணி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
”வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பாஜகவுக்கு ஊதுகுழலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.
“சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.