சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படும் முன், பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்
"இது ஒரு மகிழ்வான, தித்திப்பான டெல்லி பயணம். சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் அல்ல. அவர்தான் துணை குடியரசுத் தலைவர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் இருக்கிறது. கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகத்தின் பெருமையாக விளங்கும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஆதரவு தராமல் தி.மு.க. உட்பட சில கட்சிகள் மாபெரும் தவறு செய்தன. இந்த முறை அப்படிச் செய்யக்கூடாது என்றும், ஆதரவு கொடுக்காவிட்டால் 'தமிழ்ப்பற்று' என்ற வேஷம் கலைந்து விடும் என்றும் அவர் எச்சரித்தார்.
'ஆர்.எஸ்.எஸ்.காரர்' என்ற விமர்சனம்
"சி.பி. ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதால் அவரை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வது எப்படி எனத் தெரியவில்லை. அவர் ஊழல்வாதி கிடையாது. ஆர்.எஸ்.எஸ். என்பது நல்ல வாழ்க்கை முறையைப் பின்பற்றும் அமைப்பு. அவர் சின்ன வயதிலிருந்தே அதில் இருந்தது பெருமைதான்," என்று அவர் கூறினார்.
காங்கிரஸ்-தி.மு.க. என்ன செய்தார்கள்?
தொடர்ந்து பேசிய அவர், “சென்னை, தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்கள் பிரதமரால் விரிவாக்கப்பட்டன. தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கப்பட்டதால் தான் கார் தொழிற்சாலை வந்தது. 20 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்று பட்டியலிட முடியுமா?
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தந்துள்ளோம். சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரவில்லை என்றால் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்," என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
தவெக பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?
மேலும், "குடியரசுத் துணைத் தலைவரைப் பற்றி சிந்திக்கும்போது, தமிழக வெற்றிக் கழகத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம். அவர்களே எப்போதாவதுதான் அவர்களைப் பற்றிச் சிந்திக்கின்றனர். நாங்கள் ஏன் அவர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்?" என்று கூறி விஜய்யின் கட்சி குறித்த கேள்வியை அவர் நிராகரித்தார்.