சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. அரசுக்கு எதிராகவும், அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்தும் பேசினார்.
தூய்மைப் பணியாளர் விவகாரம்
சசிகலா பேசியதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்று செயல்படுகிறது. இதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர் விவகாரம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தூய்மை பணியாளர் விவகாரத்தில், கடந்த 2016 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அது குறித்து எனக்கு முழுமையாக தெரியும். ஆனால் அதன் பிறகு அவர் மறைந்து விட்டதால் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
2020-ல் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார். 2021 தேர்தல் அறிக்கையிலும் தூய்மைப் பணியாளர் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். ஆனால் எதையும் செயல்படுத்தவில்லை. தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிப்படி நீங்கள் நடந்து கொண்டீர்களா? என முதல்வர் பதிலளிக்க வேண்டும்.
வீடு தேடி ரேஷன் வேலை- ஏமாற்றுவேலை
விளம்பரத்தால் திமுக ஆட்சியைப் பிடித்து விடலாம் என நினைக்கிறது. நான் ஆட்சிக்கு வர விட மாட்டேன். நான் கடந்த 39 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தை அறிந்தவளாக இருக்கிறேன். இன்று மக்களை பார்க்கவே எனக்கு கஷ்டமாக உள்ளது.
ரேஷன் கடைக்கு வந்தால் பொருட்களே இருப்பதில்லை. இதை மறைப்பதற்காக வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்களை கொடுக்கிறோம் என்ற திட்டத்தை அரசு அறிவிக்கிறது. இது செய்ய முடியாத திட்டம். இதை செய்வேன் என செயல்படுத்துகின்றனர். ஏமாற்றியே ஆட்சி காலத்தை கழிக்கலாம் என்று காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. மது கடைகளாக திறந்து வருகின்றன. அதனால் இந்த ஆட்சியை கீழே இறக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்வேன். நிச்சயம் ஆட்சிக்கு வர விடமாட்டோம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தென்னாப்பிரிக்கா போன்று ஆகிவிடும்” என்றார்.
அதிமுக பலவீனமாக உள்ளது
அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு, “அ.தி.மு.க. தற்போது வரை பலவீனமாகத்தான் உள்ளது. அதை மாற்றுவது தான் எனது முக்கிய வேலை என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நிச்சயமாக அதை செய்து தான் ஆக வேண்டும். இந்த மக்களுக்கு இதை செய்யவில்லை என்றால் மிகவும் சிரமமாகி விடும். அதிமுகவில் நிலவும் சிக்கலை புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும்” என்று அவர் பதிலளித்தார்.