அரசியல்

தவெக-விடம் ஒரு கொள்கையும் இல்லை- நயினார் நாகேந்திரன்

“ஒரு கொள்கையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து தலைவர்களைக் காண்பித்து இதுதான் எங்கள் கொள்கை என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தவெக-விடம் ஒரு கொள்கையும் இல்லை- நயினார் நாகேந்திரன்
Nainar Nagendran and Vijay
தமிழக பாஜகவின் பூத் கமிட்டி இன்று மாலை திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “பாரதி ஜனதா கட்சி இந்தியா முழுவதும் 1652 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. 330 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உலகத்திலேயே மிகப்பெரிய தலைவர் எங்க தலைவர் மோடி. உலகத்திலே மிகப்பெரிய கட்சி எங்கள் கட்சிதான். நடிகர் விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்து உள்ளார்.

ஆனால் அவர் இரண்டு மாநாடு நடத்திவிட்டு எங்கள் எதிரி கட்சி பாஜக என்று கூறுவதை நான் எப்படி பார்க்கிறேன் என்பதை விட நீங்கள் பத்திரிகையாளர்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் எந்தவித ஒரு கொள்கையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து தலைவர்களைக் காண்பித்து இதுதான் எங்கள் கொள்கை என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

பாஜக, அதிமுக கூட்டணி அடிமை கூட்டணி என விஜய் கூறுகிறார் என்ற கேள்விக்கு, எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. அப்படி எனக்கு யாராவது கூறி தெரிய வந்தால் அதற்குரிய தக்க பதிலடி தரப்படும். எந்த ஒரு கொள்கைப் பிடிப்பும் இல்லாத கட்சியை ஆரம்பித்து விட்டு அவர் எங்கள் கூட்டணி பற்றி எந்த நியாயத்தின் அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை.

கதைகள் எல்லாரும் கூறுகிறார்கள், தமிழக மக்கள் எல்லோருடைய கதைகளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டு மாநாடுகள் நடத்திய இவர்கள் எங்கள் கூட்டணி பற்றி சொல்வது எந்த வகையில் நியாயம்” என்றார்.