K U M U D A M   N E W S

ரூ

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளையடித்த வங்கி மேலாளர்.. வயதானவர்களின் வைப்பு நிதியை குறி வைத்து மோசடி!

லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா கோலாகலம்.. பக்தர்கள் பங்கேற்பு!

பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா.. மோகன் பகவத் பங்கேற்பு

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நீரை சேமிக்க வேண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் அழிவிற்கு முன்பு நாம் பல்வேறு முன்னெடுப்புகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பீகாரிலிருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதி – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.

ட்ரம்ப் தலையீட்டால் இஸ்ரேல் - ஈரான் போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியது போல், இஸ்ரேல் - ஈரான் இடையேயும் அமைதியை ஏற்படுத்துவேன். என்னுடைய தலையீட்டால் இஸ்ரேல்-ஈரான் போர் முடிவுக்கு வரும். பதற்றத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? டி.என்.பி.எஸ்.சி தலைவர் கொடுத்த அப்டேட்

குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் பகை என்ன? யார் பலம் வாய்ந்தவர்கள்? வெல்லப்போவது யார்?

ஈரான் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை என்ன? இவர்களில் யார் பலம் மிக்கவர்கள்? போர் மூண்டால் வெல்லப்போவது யார்?

பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் மரணம்- பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

தன்னை பார்க்க வருகைத்தரும் நோயாளிகளிடம் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்து வந்த புகழ்பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் கனக ரெத்தினம்பிள்ளை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பாமகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்- ஜோதிமணி எம்.பி

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தொடர் மழை காரணமாக நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று: பணிகளை மேற்கொள்ள அனுமதி!

தமிழகத்தில் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று பெற ரூ.18 கோடிக்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நீலகிரியில் கனமழை.. மலைப்பயிர்கள் பெரும் சேதம்.. விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

ஐ.பி.எல் சூதாட்டம்: ஒருவர் கைது - ரூ.96 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

கோவையில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் சொத்து, 46 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய 20 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பத்தைத் தவிர, தற்போது புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சர்பத் ஜிகாத்' சர்ச்சை: பாபா ராம்தேவை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!

ரூஹ் அஃப்சாவுக்கு எதிரான சர்பத்-ஜிஹாத் தொடர்பாக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் வகுப்புவாத அவதூறுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்...பூந்தமல்லி – போரூர் இடையே சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

இந்திய கடற்படையை வலுப்படுத்த 26 ரஃபேல் விமானங்கள்.. ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய கடற்படைக்கு பிரான்சிடமிருந்து ரூ.63000 கோடியில் 26 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பள்ளி சுவற்றில் இருந்த அம்பேத்கர் படம் அழிப்பு...மர்ம நபர்களின் செயலால் பரபரப்பு

வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு

அந்த மனசுதான் சார் கடவுள்: சாலையில் கிடந்த ரூ.2 லட்சம்.. கொத்தனாருக்கு குவியும் பாராட்டு

சாலையில் கிடந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கொத்தனார் வேலை செய்து வரும் நபர் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தரமற்ற வகையில் பேசக்கூடாது” – அமைச்சர் பொன்முடிக்கு ஜோதிமணி எம்.பி., அட்வைஸ்

தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்

17 வயது சிறுமியை திருமணம் செய்த மாணவன்.. சினிமா பாணியில் பெண்ணை கடத்திய உறவினர்கள்

கரூரில் 19 வயது கல்லூரி மாணவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற ஆம்னி வேனை சினிமா பாணியில் அடித்து நொறுக்கி சிறுமியை கடத்தி சென்ற உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடரும் சைபர் கிரைம் மோசடி.. போலி ஆன்லைன் ரூ.90 லட்சம் திருடிய 2 பேர் கைது!

போலி ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மூலம் ரூ. 90 லட்சத்தை திருடிய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மோசடி கும்பல் திருடிய பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றியது விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.