அண்ணாவின் 117 வது பிறந்த நாளையொட்டி வேலூர் மண்டித்தெருவில் அஇஅதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்புச்செயலாளரும், முன்னாள் எம்.பியுமான தம்பிதுரை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “டிவில பார்த்திருப்பிங்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் டெல்லி சென்று துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து சொன்னதை பார்த்திருப்பீர்கள். இது தமிழர்களுக்கு எல்லாம் கிடைத்த பெருமை. தமிழர்களுக்கு பெருமையை வாங்கி தரும் இயக்கம் அதிமுக.
திமுக தமிழர் நலன் சார்ந்த கட்சியா?
தமிழகத்துக்கு துரோகம் செய்து வரும் கட்சி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கட்சி. அதை திமுக என சொல்லக்கூடாது, திமுக அண்ணா உருவாக்கிய கட்சி. தமிழன்… தமிழன் என மார் தட்டிக்கொள்பவர்கள் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. துணை ஜனாதிபதியாகும் முன் ஆளுநராக இருந்தார். கவர்னர் என்றால் கட்சியில் இருக்கக்கூடாது. அப்போதே அவர் கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்படி இருக்கும் போது துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது அவர் ஆர்.எஸ்.எஸ் என பொய் பிரச்சாரம் செய்து எதிராக வாக்களித்த திமுக தமிழர் நலன் சார்ந்த கட்சியா?
எம்ஜிஆர் நினைத்து இருந்தால், எம்ஜிஆர் திமுக என வைத்திருக்கலாம். ஆனால் அண்ணா மீது கொண்ட பற்றால் காலம் எல்லாம் அண்ணா பெயர் நிலைத்து நிற்கும் வகையில் அண்ணா திமுக என பெயர் வைத்தார் எம்.ஜி.ஆர். ஆனால் இன்றைய முதல்வர் அண்ணா பெயரை மறந்துவிட்டு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என தன் பெயரை பறைசாற்றிக்கொண்டிருக்கிறார். திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, துர்கா, சபரீசன், இன்பநிதி என 5 முதலமைச்சர்கள் உள்ளனர்.
ஓபிஎஸ் பெயரை உச்சரிக்க மறுப்பு
ஈவேரா நினைத்திருந்தால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வாரிசு ஆக்கியிருக்கலாம். எம்.ஜி.ஆர் நினைத்து இருந்தால் அவரது அண்ணண் சக்கரபாணி குடும்பத்தாரை அரசியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஜெயலலிதாவும் சாதாரண டீ வியாபாரியை முதல்வராக அமர வைத்தவர். ஆனால் அவரது பெயரை சொல்ல நான் விரும்பவில்லை என ஓபிஎஸ் பெயரை உச்சரித்த மறுத்த தம்பிதுரை. ஆனால் திமுக இன்று குடும்ப ஆட்சி நடத்தி வருகிறது.
நமது கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு குவட்டருக்கு பத்து ரூபாய் வாங்கிய கரூரை சேர்ந்தவர் உலகமே பார்க்கும் வகையில் முப்பெரும் விழாவை நடத்துவேன் என்றார். ஆனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டி அனைவரும் ஓடியே விட்டார்கள்.
கொள்ளையடித்த பணத்தில் முப்பெரும் விழா
இபிஎஸ் போகும் இடங்களில் ஏதாவது மழை பெய்கிறதா, அவர் வந்து போன பிறகு தான் மழை பெய்யும் வருணபாகவானே விவசாயி மகனை வாழ்த்துகிறார்.
அதிமுக ஆட்சிக்கு வந்து உங்களை எல்லாம் ஓட ஓட விரட்டுவார்கள். கரூர் காரரை பற்றி அன்றைக்கே அண்ணா சொன்னார். அமைச்சர் போன்ற சில்லரை பதவிக்காக நாம் இருக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். கொள்ளையடித்த பணத்தில் கரூரில் முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளது என விமர்சனம் செய்தார்.
மேலும் மோடியே ஜிஎஸ்டியை எதிர்த்தவர் தான். ஜிஎஸ்டியை கொண்டு வந்ததே காங்கிரஸ் பா.சிதம்பரம் தான். இந்தியை, நீட்டை கொண்டு வந்ததும் காங்கிரஸ் தானே, கல்வியை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுத்தது திமுக தானே. அப்போது கூட்டணியில் இருந்த திமுக என்ன செய்து கொண்டிருந்தீர்கள். திமுகவின் கூட்டணியாவது கூட்டாவது ஒன்றும் செய்ய முடியாது.
புது, புது திட்டங்களை திமுக அறிவிப்பதாக சொன்னாலும், அதை செயல்படும் திராணி இபிஎஸ்க்கு தான் உள்ளது. 2026ல் அதிமுக ஆட்சி அமையும்” என தெரிவித்தார்.