சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் சரக்கு விமானங்களில் கொரியர் பார்சல் மூலம் ஈ-சிகரெட்கள் மற்றும் போலி சிகரெட்டுகள் பெருமளவு கடத்திக் கொண்டுவரப்படுவதாகச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 தினங்களாகச் சென்னை விமான நிலையத்தில் உள்ள, வெளிநாட்டு பார்சல்கள் வரும் அஞ்சல் துறை அலுவலகத்தில் திடீர் சோதனைகள் நடத்தினர்.
அப்போது மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வெவ்வேறு முகவரிகளில் 3 அட்டைப்பெட்டிகளில் கொரியர் பார்சல்கள் வந்திருந்தன. அந்தப் பார்சல்களில் ஹங்கர்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் சுங்கத்துறை அதிகாரிகளுக்குப் பார்சல்கள் மீது, சந்தேகம் ஏற்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் பார்சல்களை திறந்து பார்த்துச் சோதனை நடத்தினர். அதனுள் 998 ஈ- சிகரேட்டுகள், சட்ட விரோதமாகக் கடத்திக் கொண்டு வரப்பட்டிருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 25 லட்சம். இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், அந்த ஈ - சிகரெட்களை பறிமுதல் செய்து, சுங்க சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதே போல் துபாயிலிருந்து சரக்கு விமானத்தில் 10 கொரியர் பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பார்சல்களில், டாய்ஸ் பொம்மைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 10 பார்சல்களும், ஒவ்வொரு பார்சளும் 25 கிலோ எடையில், சென்னை நகரில் உள்ள பல்வேறு முகவரிகளுக்கு வந்திருந்தன. ஆனால் அந்த முகவரிகளைத் தொடர்பு கொண்டபோது, அனைத்தும் போலியான முகவரிகள், அதைப் போல் பார்சல்களில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்களும், போலியானவைகள் என்று தெரிய வந்தன.
இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 10 பார்சலையும் திறந்து பார்த்துச் சோதனையிட்டனர். அதில் வெளிநாட்டு சிகரெட்டுகள், மற்றும் நமது இந்திய நாட்டு சிகரேட்டுகள் போல், போலியான சிகரேட்டுகள் மொத்தம் 2, 30,400 சிகரெட்டுகள் இருந்தன அதன் சர்வதேச மதிப்பு ரூ. 25 லட்சம். இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு சிகரெட்கள், மற்றும் போலி சிகரேட்களையும் பறிமுதல் செய்தனர்.
இது சம்பந்தமாக, சுங்கச் சட்ட விதிகளின்படி வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதோடு வெளிநாடுகளிலிருந்து போலி முகவரிகளில், சென்னைக்கு சட்ட விரோதமாக ஈசிகரேட்டுகள் மற்றும் வெளிநாட்டு சிகரேட்டுகள், இந்திய சிகரேட் போல் போலியான சிகரேட்டுகள் கடத்தி வரும், கடத்தல் கும்பலை, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தியாவிற்குள் வெளிநாட்டு ஈ - சிகரேட்டுகள் மற்றும் போலியான சிகரேட்டுகள் போன்றவைகளை கடத்திக் கொண்டுவருவதால், சிகரேட்களை புகைக்கக்கூடிய பயனாளிகளுக்கு, பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, உடல் நலம் பாதிப்பு பெருமளவு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய போலி சிகரேட்கள் கடத்தல் கும்பலை, கூண்டோடு பிடிப்பதற்காக, சுங்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.