உலகம்

மெட்டாவில் 24 வயது இளைஞருக்கு ரூ. 2,196 கோடி சம்பளம்.. மாட் டீட்கேவின் திறமையை நம்பும் மெட்டா!

மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், மாட் டீட்கே என்ற 24 வயது இளைஞரை 4 வருடங்களுக்கு ரூ. 2,196 கோடி சம்பளத்தில் மெட்டாவில் பணியமர்த்தியுள்ளார்.

மெட்டாவில் 24 வயது இளைஞருக்கு ரூ. 2,196 கோடி சம்பளம்.. மாட் டீட்கேவின் திறமையை நம்பும் மெட்டா!
மெட்டாவில் 24 வயது இளைஞருக்கு ரூ. 2,196 கோடி சம்பளம்.. மாட் டீட்கேவின் திறமையை நம்பும் மெட்டா!
மெட்டா நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மிக முக்கிய புரட்சி ஏற்படுத்தும் நோக்கில், வெறும் 24 வயதான இளைஞரான மாட் டீட்கேவுக்கு நான்கு வருடங்களுக்கு ரூ. 2,196 கோடி சம்பளம் வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

யார் இந்த மாட் டீட்கே?

மாட் டீட்கே, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. (PhD) படித்து வந்தவர். ஆனால், தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஒரு ஸ்டார்ட்-அப் தொடங்கும் திட்டத்தில் இருந்துள்ளார். ஏ.ஐ. (Artificial Intelligence) துறையில் அவர் மிகவும் சிறந்து விளங்கியதால், மெட்டா நிறுவனம் அவரைத் தங்கள் நிறுவனத்தில் சேர்க்க விரும்பியுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படித்து வந்த டீட்கே, தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி, AI ஸ்டார்ட்-அப் ஒன்றை துவங்க முயன்ற நிலையில், மெட்டா நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தார்.

எப்படி மெட்டாவில் இணைந்தார்?

மெட்டா முதலில் மாட் டீட்கேவுக்கு 4 வருடங்களுக்கு ரூ. 1,098 கோடி சம்பளம் தருவதாகக் கூறி அணுகியது. ஆனால், சம்பள பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு, 4 வருடங்களுக்கு ரூ. 2,196 கோடியென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்டமான சம்பளத்திற்கு டீட்கே ஒப்புக்கொண்டு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்துள்ளார்.

ஏன் இவ்வளவு பெரிய சம்பளம்?

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உள்ள வல்லுநர்களுக்கு உலகளவில் அதிக தேவை உள்ளது. மாட் டீட்கேயின் திறமையும், ஏ.ஐ. குறித்த அவரது ஆழ்ந்த அறிவும், மெட்டாவுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் ஏ.ஐ. துறையில் மெட்டாவை முன்னிலைப்படுத்த, மாட் டீட்கேவின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் எனச் சக்கர்பெர்க் நம்புகிறார்.

AI துறையில் உலகளவில் கடும் போட்டி நிலவுகிறது. OpenAI, Google, Anthropic உள்ளிட்ட நிறுவனங்களை முந்த, மெட்டா தனது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முதலீடு செய்கிறது. அந்த வரிசையில், மாட் டீட்கேயின் ஆளுமை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவை முன்னிறுத்தி, மெட்டாவின் எதிர்கால வளர்ச்சிக்குத் தன்னுடைய பங்களிப்பு முக்கியமாக இருக்கும் எனக் கூறியுள்ள டீட்கே, இந்த வாய்ப்பை "ஒரு கனவுபோல்" வர்ணித்துள்ளார்.

மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா, AI உலகில் முன்னிலை பெறும் முயற்சியில், இளம் வல்லுநர்களைக் கைப்பற்றும் முயற்சியில் இதை ஒரு முக்கியமானதாக கருதப்படுகிறது.