K U M U D A M   N E W S

ரூ

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் அலட்சியம் - மாற்றுத்திறனாளிகள் வேதனை

உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கூட்டுறவுத்துறையினர் அலட்சியமாக உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை

திருவாரூரில் நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம்

மாணவ மாணவியர்கள், கல்வியாளர்கள் அறிவுதிறனை பழாக்கும் வகையில் நகராட்சி நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம் நடந்துள்ளது.

நாகை, திருவாரூரில் விஜய் இன்று பரப்புரை- உற்சாக வரவேற்பளிக்க தவெகவினர் ஏற்பாடு

நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் மக்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.

சுவர் விளம்பரத்திற்கு போட்டி: கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாருடன் வாக்குவாதம்

சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பிரச்னையால் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாரிடம் வாக்குவாதம்

திமுக முப்பெரும் விழாவிற்கு சென்ற பேருந்து மோதி கர்ப்பிணி உயிரிழப்பு- படுகாயத்துடன் கணவர் அனுமதி

திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

கொள்ளையடித்த பணத்தில் கரூரில் முப்பெரும் விழா- தம்பிதுரை விமர்சனம்

துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து சொல்லத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார் என அதிமுக முன்னாள் எம்பி தம்பிதுரை விளக்கம்

“அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக மாற்றியவர் இபிஎஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கர்ஜனை மொழி கனிமொழி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

திமுக வரலாற்றில் இப்படியொரு முப்பெரும் விழா நடைபெற்றது இல்லை என செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் புகழாரம்

தயாரிப்பில் சுதந்திரம் இல்லை.. தயாரிப்பு நிறுவனத்தை மூடிய இயக்குநர் வெற்றிமாறன்!

திரைப்பட தயாரிப்பில் சுதந்திரம் இல்லை என்று இயக்குநர் வெற்றிமாறன் தனது க்ராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனியை மூடுவதாக அறிவித்துள்ளார்.

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்: ரூ. 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் அழுகும் அபாயம்!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிதி நிறுவன உரிமையாளர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு- கரூரில் பரபரப்பு

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்....பிரகாசமாக காட்சியளித்த காமாட்சி அம்மன்

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஆன அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சி அம்மனை ஏராளமான ரசிகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மெட்டாவில் 24 வயது இளைஞருக்கு ரூ. 2,196 கோடி சம்பளம்.. மாட் டீட்கேவின் திறமையை நம்பும் மெட்டா!

மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், மாட் டீட்கே என்ற 24 வயது இளைஞரை 4 வருடங்களுக்கு ரூ. 2,196 கோடி சம்பளத்தில் மெட்டாவில் பணியமர்த்தியுள்ளார்.

உள்ளாட்சி சாலைப் பணி நிதியில் ரூ.78 லட்சம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது!

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

காதல் விவகாரச் சண்டையில் நீதிமன்ற ஊழியர் குத்திக்கொலை ..குற்றவாளி தப்பி ஓட்டம்!

திருவாரூரில் காதல் தொடர்பான சண்டையை விலக்கச் சென்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி தப்பி ஓடிய நிலையில், உடன் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

74 வயது மூதாட்டியை விரட்டிவிட்ட மகன்…கண்ணீருடன் ஆட்சியரிடம் மனு

தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை

சுந்தர் பிச்சை நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடி – ப்ளூம்பெர்க் தகவல்!

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.

ரூ.35 லட்சம் நில விவகாரம்.. மன்சூர் அலிகான் மகன் தகராறு.. போலீசார் விசாரணை!

நடிகர் மன்சூர் அலிகான் நிலத்திற்காக்நிலம் வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை வாங்கி விட்டு இடத்தை தரவில்லை இடத்தின் உரிமையாளரிடம் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்… அக்ஷய் குமார் எடுத்த அதிரடி முடிவு!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது திரைப்படங்களில் செய்யும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்காகப் பிரபலமானவர் தற்போது அவர் எடுத்துள்ள மனிதாபிமான முடிவு திரைப்படத் துறையில் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது

மலேசியா, துபாயிலிருந்து சட்டவிரோத சிகரெட் கடத்தல்: சுங்கத்துறை அதிரடி சோதனை!

மலேசியா மற்றும் துபாய் நாடுகளிலிருந்து விமானங்களில் 13 கொரியர் பார்சல் மூலம் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புடைய 2,31,400 சிக்ரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்கள் மீது அக்கறை - செந்தில் பாலாஜியை சாடிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது தினசரி நடந்து வரும் நிலையில் வருவாய் துறை, காவல் துறை, வனத்துறை என அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

சத்தீஸ்கரில் இணைய மோசடி: ஒன்றரை ஆண்டில் ரூ. 107 கோடி இழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

ரூ.50 நாணயம் அறிமுகம்?- மத்திய அரசு கொடுத்த விளக்கம்

ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது