சென்னை, அக். 2: கரூர் மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-யின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 'ஒய் பிரிவு' அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்-யின் 'ஒய் பிரிவு' பாதுகாப்பு
த.வெ.க. தலைவர் விஜய்க்கு கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 'ஒய் பிரிவு' பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அணியில், 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணம், மாநாடு போன்றவற்றைத் திட்டமிடும்போது, இந்தக் கமாண்டோக்கள் அவருடன் சென்று பாதுகாப்பு வழங்குகின்றனர்.
கரூர் பாதுகாப்பு குறித்து விசாரணை
இந்த நிலையில், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 'ஒய் பிரிவு' பாதுகாப்பு அதிகாரிகளிடம் கீழ்வரும் தகவல்கள் குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன:
கரூரில் எந்தெந்த வகைகளில் பாதுகாப்பு வழங்கப்பட்டது?, பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு இருந்ததா?. நெரிசல் ஏற்பட்டபோது பாதுகாப்பு அதிகாரிகள் எப்படிச் செயல்பட்டனர்? உள்ளிட்ட கேள்விகள் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறையின் இந்த விசாரணை, கரூர் துயரச் சம்பவத்தின் பல்வேறு கோணங்களை வெளிக்கொண்டுவர உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.