K U M U D A M   N E W S

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கரூரில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா? விஜய்-யின் 'ஒய் பிரிவு' அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விசாரணை!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.